Rajinikanth: தில் இருந்தா டோப்பா இல்லாமல் நடிங்க ரஜினி? சூப்பர் ஸ்டாருக்கு ப்ளூ சட்டை சவால்!
செளபின் சாஹிருக்கு தலைமுடி இல்லாதது குறித்து பேசிய ரஜினிகாந்திற்கு, தைரியம் இருந்தால் டோப்பா இல்லாமல் நடியுங்கள் என்று ப்ளூசட்டை மாறன் சவால் விட்டுள்ளார்.

கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் செளபின் சாஹிர் பற்றி பேசியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. செளபின் சாஹிர் தலையில் முடி இல்லாமல் வழுக்கையாக இருக்கிறார், அவர் எப்படி எனக்கு வில்லனாக இருக்க முடியும்? என்று லோகேஷ் கனகராஜிடம் கேட்டதாக ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினியின் சர்ச்சை பேச்சு:
ரஜினியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பேசலாமா? என்றும், தலையில் முடி இல்லாத ரஜினிகாந்தே இவ்வாறு பேசலாமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் பேச்சுக்கு திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, எனக்கு வில்லன் சோபின் சஹீர் என லோகேஷ் கூறினார். என்னடா இது.. வழுக்கை தலையாக இருக்கிறாரே.. யார் இவர்? எனக்கெப்படி வில்லனாக நடிப்பார் என்று யோசித்தேன். மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என கூறியதால் ஓகே சொன்னேன் - கூலி ட்ரைலர் வெளியீட்டில் தலைவர் பேசியது.
75 வயதிலும் டோப்பா:
75 வயதிலும் நீங்கள் டோப்பா வைத்துதான் நடிக்கிறீர்கள். ஆனால் முடியை நம்பி சோபின் நடிப்பதில்லை. தனது நடிப்பை மட்டுமே நம்புகிறார். வயது 41. அயோப்னிட் புஸ்தகம், சூடானி ப்ரம் நைஜீரியா, கும்பலாங்கி நைட்ஸ் போன்ற படங்களை பார்த்திருந்தால்.. இவர் யாரென்று தெரிந்திருக்கும். ஃபஹத் ஃபாசில் நடிக்க வந்தபோது அவருக்கு தலைமுடி குறைவாக இருந்ததை பலர் கிண்டல் செய்தனர்.

எனக்கு வில்லன் சோபின் சஹீர் என லோகேஷ் கூறினார். என்னடா இது.. வழுக்கை தலையாக இருக்கிறாரே.. யார் இவர்? எனக்கெப்படி வில்லனாக நடிப்பார் என்று யோசித்தேன்.
— Blue Sattai Maran (@tamiltalkies) August 12, 2025
Manjumnel Boys படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என கூறியதால் ஓகே சொன்னேன் - கூலி ட்ரைலர் வெளியீட்டில் தலீவர் பேசியது.
75… pic.twitter.com/THivaRg7JD
தில் இருந்தா டோப்பா இல்லாமல் நடிங்கள்:
செஞ்சிட்டு போங்க. நடிப்புல நான் யாருன்னு காட்டறேன் என சவால் விட்டு இன்றுவரை விக் வைக்காமல் நடித்து இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். வயது 43.
உங்களுக்கு தில் இருந்தால் டோப்பா இல்லாமல் நடியுங்கள் ரஜினி. மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நாளை கூலி ரிலீஸ்:
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் நாளை வெளியாகிறது. உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் கூலி படம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர் மற்றும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கான் நடித்துள்ளனர்.
ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இந்த படத்தின் டிக்கெட்டுகள் ஏற்கனவே உலகெங்கும் விற்றுத்தீர்ந்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.





















