மேலும் அறிய

உயர் கல்வி கனவு நனவாக... 9-12ம் வகுப்பு மாணவர்களே.. ஆக. 29-க்குள் இதை செய்ங்க!

9 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு‌ ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்குள்‌ மின்னஞ்சல்‌ முகவரி உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ், 2024-2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 9 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு‌ ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்குள்‌ மின்னஞ்சல்‌ முகவரி செயல்பாடு வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்குதல்‌ சார்ந்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்‌ கீழ்‌ அனைத்து அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 9 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன.

மின்னஞ்சல்‌ முகவரி ஏன் முக்கியம்?

மாணவர்களுக்கு மின்னஞ்சல்‌ முகவரி உருவாக்குவது உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின்‌ ஒரு முக்கிய செயல்பாடாகும்‌. ஏனெனில்‌, மாணவர்கள்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ வழங்கும்‌ இணையத்‌ தள சான்‌றிதழ்‌ படிப்புகள்‌ படிப்பதற்கும்‌, உயர்‌ கல்விக்கான போட்டித்‌ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும்‌ மற்றும்‌ உயர்கல்விக்கு விண்ணப்பிக்கவும்‌ மின்னஞ்சல்‌ முகவரி என்பது மிகவும்‌ அவசியமான ஒன்றாக உள்ளது.

 கடந்த கல்வியாண்டில்‌ (2024-25) 9 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும்‌ மின்னஞ்சல்‌ முகவரியானது உருவாக்கப்பட்டது. ஆகவே இந்த கல்வியாண்டில்‌ (2025-26) அனைத்து 9 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கும்‌, கடந்த ஆண்டு மின்னஞ்சல்‌ உருவாக்கப்படாத 10 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும்‌ மின்னஞ்சல்‌ முகவரியை ஆகஸ்டு 29-க்குள்‌ உருவாக்கிக்‌ கொடுத்திட சார்ந்த அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களையும்‌ அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

EMIS தளத்தில்‌ பதிவிட வேண்டும்

மாணவர்களுக்கு புதியதாக தொடங்கப்பட்ட மின்னஞ்சல்‌ முகவரியினை EMIS இணைய தளத்தில்‌ பதிவிடுதல்‌ வேண்டும்‌.

 மின்னஞ்சலை உருவாக்கிய பின்‌, மின்னஞ்சலுக்குள்‌ எவ்வாறு உள்நுழைவது, மற்றவர்களுக்கு மின்னஞ்சல்‌ அனுப்புவது, பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாறு திறந்து படிப்பது, மின்னஞ்சலில்‌ இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும்‌ கற்பித்தல்‌ வேண்டும்‌.

 அவ்வாறு உருவாக்கப்படும்‌ மின்னஞ்சலின்‌ கடவுச்‌ சொல்லை மாணவர்கள்‌ நினைவில்‌ வைத்திருத்தல்‌ வேண்டும், ‌ மற்றவர்களுக்கு பகிரக்‌ கூடாது எனவும்‌, இதன்‌ மூலம்‌ மற்றவர்கள்‌ தங்கள்‌ மின்னஞ்சல்‌ கணக்கை பயன்படுத்துதலை தவிர்க்கலாம்‌ என்கின்ற விவரங்களையும்‌ மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள்‌ வழிகாட்ட‌ வேண்டும்‌.

 ஆசிரியர்களின்‌ வழிகாட்டுதல்‌ மூலம்‌ மாணவர்கள்‌ புதியதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல்‌ முகவரியிலிருந்து cgtnss@gmail.com என்கின்ற மின்னஞ்சலுக்கு நான்‌ புதிய மின்னஞ்சல்‌ முகவரியினை பெற்றேன்‌” என்றும்‌ “உயர் கல்வியில்‌ மாணவர்களின்‌ இலக்கு என்னவாக இருக்கின்றது” என்கின்ற விவரத்தினை மாணவர்கள்‌ மின்னஞ்சல்‌ வாயிலாக அனுப்புவதற்கு வழிகாட்டுதல்‌ வேண்டும்‌ என்று தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலாளர் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget