Friendship Day 2025 Wishes: நண்பா.. நாமதான் நட்புக்கு புது வெண்பா.. நண்பர்களுக்கு இந்த வாழ்த்தை ஷேர் பண்ணுங்க!
Friendship Day 2025 Wishes in Tamil: சர்வதேச நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நண்பர்களுக்கு கீழே உள்ள வாழ்த்து கவிதைகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம்.

இந்தியாவில் சர்வதே நண்பர்கள் தினம் நாளை மறுநாளான ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் நண்பர்கள் மிகவும் முக்கிய அங்கமாக வகிக்கின்றனர். நல்ல நண்பர்கள் நல்ல வழிகாட்டியாகவும் திகழ்கின்றனர். சிலர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைவதும் நண்பர்களே ஆகும்.
சர்வதேச நண்பர்கள் தினம்:
அந்த நண்பர்களை பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் அவர்களுக்கு இந்த வாழ்த்துச் செய்திகளை காணலாம்.
நண்பா..
நாம தான் நட்புக்கு புது வெண்பா...

என் வழிகாட்டி..
என் சுமைதாங்கி...
என்னை வழிநடத்தும் தளபதி...
என் அன்பு நண்பனே நீ..

நிலையில்லா வாழ்வில்..
நிலைத்து நிற்கும் துணையே நட்பு..

தடையை உடைக்கும் படை..
நண்பன்தான் என்னோட துணை..
இரவும் பகலும் இனிது..
நண்பா..
உன்னுடன் இருந்த பொழுது..

துன்பம் நிறைந்த வாழ்வில்..
இன்பம் தரும் வரம் நட்பே..
கவலை மறந்த சிரிக்க..
நட்பு ஒன்றே மருந்து..
அந்த நட்பு உண்மையாக இருந்தால்..
இறுதிவரை உன் வாழ்வே உனக்கு விருந்து...

தோல்வியிலும் தோள் கொடுக்கும் தோழன்..
துயரிலும் தாங்கும் வீரன்..
அவனே
நண்பன் எனும் தூதன்...
இந்த வாழ்த்து கவிதைகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி இந்த நண்பர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.





















