மேலும் அறிய

புதுச்சேரி போலீஸ் வேலைவாய்ப்பு: SI & கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி எப்போது தெரியுமா?

புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 148 போலீஸ் கான்ஸ்டபிள்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 148 போலீஸ் கான்ஸ்டபிள்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், போலீஸ் துறையில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர், காவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.

புதுச்சேரி போலீசில் 70 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 148 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்

புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் (SI) மற்றும் 148 காவலர் ( Constable ) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள்,2025 ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 10:00 மணி முதல், செப்டம்பர் 12 ஆம் தேதி மாலை 3:00 மணி வரை, அரசு இணையதளம் [ https://recruitment.py.gov.in](https://recruitment.py.gov.in ) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

70 எஸ்.ஐ., பணியிடங்கள்

70 சப் இன்ஸ்பெக்டர் 70 பணியிடங்களில் பொது பிரிவு-31; எஸ்.சி., -11; ஓ.பி.சி.,-7; எம்.பி.சி., 12; பி.சி.எம்.,-1; இ.பி.சி.,-1; இ.டபுள்யூ.எஸ்.,-7 என இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டள்ளது. இதில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடாக பொது 12; எஸ்.சி.,-3; ஓ.பி.சி.,-2; எம்.பி.சி.,4; இ.டபுள்யூ.எஸ்., -2 என இட துக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது 12.9.25 அன்று 20 முதல் 27 வயதிற்கு உட்பட்டவாரக இருக்க வேண்டும்.

148 கான்ஸ்டபிள் பணியிடங்கள்

148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் கான்ஸ்டபிள் பிரிவில், ஆண்களுக்கான 100 பணியிடங்களில், பொது பிரிவினர்-39; எம்.பி.சி.,-18; ஓ.பி.சி.,-11; எஸ்.சி.,-16; இ.பி.சி.,-2; பி.சி.எம்.,-2; எஸ்.டி.,-1; பி.டி.,-1; இ.டபுள்யூ.எஸ்., -10 என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான 48 பணியிடங்களில், பொது பிரிவினர்-24; எம்.பி.சி.,-8; ஓ.பி.சி.,-5; எஸ்.சி.,-7; இ.டபுள்யூ.எஸ்.,-4 என என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 148 பணியிடங்களில், முன்னாள் படைவீரர் பிரிவிற்கு 14 இடங்கள், விளையாட்டு வீரர் பிரிவிற்கு 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பிளஸ் 2 அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது, 12.9.25 அன்று 22 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எம்.பி.சி., ஓ.பி.சி., இ.பி.சி., பி.சி.எம்., மற்றும் பி.டி., பிரிவினருக்கு 3 வயதும், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 5 வயது தளர்வு உண்டு.

பெண்கள் பிரிவில் விதவை, விவாகரத்து பெற்றோர், கணவரை பிரிந்து மறுமணம் செய்து கொள்ளதா பொது பிரிவினர் 35 வயதினரும், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 40 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

உடல் தகுதியில், ஆண்கள் 165 செ.மீ., குறையாமலும், பெண்கள் 154 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். ஆண்கள் மார்பளவு 81 முதல் 86 செ.மீ., இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடைய வேண்டும். பெண்களுக்கு மார்பளவு கிடையாது. எடை அளவு ஆண்களுக்கு உடல் நிறை குறியீடு (பி.எம்.ஐ.,) அளவின்படி 18.50 முதல் 29.9வரை இருக்கலாம். பெண்கள் 45 கிலோ எடை இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:

https://recruitment.py.gov.in https://recruitment.py.gov.in

விண்ணப்ப தொடங்கும் தேதி: 13.08.2025 – காலை 10:00 மணி
விண்ணப்ப கடைசி தேதி: 12.09.2025 – மாலை 3:00 மணி

மேலும் தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும் அல்லது மேற்படி இணையதளத்தை அணுகவும்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நவம்பர் 27-ஐ குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! மயிலாடுதுறை இளைஞர்களுக்குக் காத்திருக்கும் 500+ வேலைவாய்ப்புகள்!
நவம்பர் 27-ஐ குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! மயிலாடுதுறை இளைஞர்களுக்குக் காத்திருக்கும் 500+ வேலைவாய்ப்புகள்!
பட்டதாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 200 வேலைவாய்ப்புகள்: தமிழத்திற்கு 10 இடங்கள்
பட்டதாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 200 வேலைவாய்ப்புகள்: தமிழத்திற்கு 10 இடங்கள்
Job Opportunity: 500 பேருக்கு மின்வாரியத்தில் தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
Job Opportunity: 500 பேருக்கு மின்வாரியத்தில் தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
விருதுநகர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் வேலை: மாதம் ரூ.18,800 சம்பளம்!
விருதுநகர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் வேலை: மாதம் ரூ.18,800 சம்பளம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Embed widget