Indias Affordable MPV: இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் - இந்த விலைக்கு எப்படியா இவ்ளோ கொட்டி கொடுக்குறீங்க?
Renault Triber 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும், ரெனால்ட் ட்ரைபர் கார் மாடல் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Renault Triber 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும், ரெனால்ட் ட்ரைபர் கார் மாடல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவின் மலிவு விலை எம்பிவி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட, ரெனால்டின் ட்ரைபர் கார் மாடல் உள்நாட்டில் மலிவு விலையில் கிடைக்கும் எம்பிவி கார் மாடலாக திகழ்கிறது. உண்மையில் இது ஒரு வித்தியாசமான கார் மாடல், நான்கு மீட்டருக்கும் குறைவான நீளத்தை கொண்டு இருப்பதால் குறைந்த வரி விகிதத்திலேயே இந்த கார் அடங்குகிறது. அதேநேரம், சொகுசு பயணத்திற்கு ஏற்ற 3 வரிசை இருக்கை வசதிகளை கொண்டுள்ளது. இந்த காரின் அடிப்படையிலேயே நிசான் உருவாக்கி வரும் புதிய கார் சந்தைப்படுத்தப்படும் வரையில், ட்ரைபருக்கு நிகரான மாடல் தற்போது வரை உள்நாட்டு சந்தையில் இல்லை. இந்நிலையில் இந்த கார் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ரெனால்ட் ட்ரைபர் விலை
ட்ரைபரின் ஆரம்ப நிலை வேரியண்டான அதெண்டிக்கின் விலை ரூ.6.30 லட்சமாகவும், டாப் எண்டான அமோஷன் ஆட்டோமேடிக் வேரியண்டின் விலை ரூ.9.17 லட்சமாகவும் (எக்ஸ் - ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் எண்டில் டூயல் டோன் ஆப்ஷன் பெற கூடுதலாக 23 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. அலாய் வீல்கள் பெறுவதற்கு கூடுதலாக ரூ.9,990 வழங்க வேண்டி உள்ளது.
ரெனால்ட் ட்ரைபர் - பவர் ட்ரெயின்
ரெனால்ட் ட்ரைபர் கார் மாடலில் அதே பழைய 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 72hp மற்றும் 96Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 5 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இந்த ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே இந்த விற்பனை செய்யப்படுகிறது.
ரெனால்ட் ட்ரைபர் - சிஎன்ஜி கிட்?
ட்ரைபர் கார் மாடலில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. ஆனால், இது ஆலையில் பொருத்தப்பட்ட அம்சமாக இல்லாமல், டீலர்களால் கோரிக்கை அடிப்படையில் பொருத்தி வழங்கப்படுகிறது. இந்த சிஎன்ஜி கிட்டிற்கு 3 வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. அதேநேரம், இந்த ஆப்ஷன் மேனுவல் வேரியண்ட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. பெட்ரோல் வேரியண்ட்களை காட்டிலும், சிஎன்ஜி எடிஷன் 1.5 மடங்கு கூடுதல் செயல்திறனை வழங்கும் என கூறப்படுகிறது. ட்ரிம் அடிப்படையில் சிஎன்ஜி கிட்டின் விலை ரூ.69 ஆயிரம் முதல் ரூ.93 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் ட்ரைபர் - மைலேஜ் விவரங்கள்
ட்ரைபரின் மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 20 கிலோ மீட்டரும், ஆட்டோமேடிக் வேரியண்டிற்கு 18.2 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிஜ உலகில் பயன்பாட்டில் இந்த மைலேஜ் திறன் மாறுபடும் என கூறப்படுகிறது.
ரெனால்ட் ட்ரைபர் - டர்போ ஆப்ஷன்?
2019 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே , கைரிடமிருந்து 100hp , 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை ட்ரைபர் பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், முந்தைய ஃபெஸ்லிஃப்ட் மட்டுமின்றி தற்போது வெளியான புதிய அப்க்ரேட் எடிஷனில் கூட ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெனால்ட் ட்ரைபர் - 7 சீட்டர் ஆப்ஷன்கள்
ரெனால்ட் ட்ரைபர் 7 இருக்கைகள் கொண்ட ஸ்டேண்டர்ட் கட்டமைப்பை கொண்டுள்ளது. ட்ரைபரை மிகவும் தனித்துவமானதாக மாற்றுவது என்னவென்றால், மூன்றாவது வரிசையை முழுவதுமாக அகற்றி அதிகளவில் இடவசதியை ஏற்படுத்த முடியும். மூன்றாவது வரிசை ஸ்ப்லிட் மற்றும் ஃபோல்ட் செயல்பாட்டையும் பெறுகிறது.
ரெனால்ட் ட்ரைபர் - அம்சங்கள்
ரெனால்ட் ட்ரைபர் தனது அளவு மற்றும் விலைக்கு ஏற்ற போதுமான அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி, ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை அடிப்படை வேரியண்ட்களில் வழங்கப்படுகின்றன. இரண்டாவது ட்ரிம்மில் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் உள்ளது. இது 4 ஸ்பீக்கர்கள் உடன் கூடிய ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ரியர் கேமரா ஆகிய அம்சங்களை கூடுதலாக கொண்டுள்ளது. டாப் ஸ்பெக் வேரியண்டானது வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், புஷ் பட்டர் ஸ்டார்ட் - ஸ்டாப், கூல்ட் செண்டர் கன்சோல் ஸ்டோரேஜ் மற்றும் செகண்ட் ரோ சார்ஜிங் போர்ட்ஸ் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக 15 இன்ச் ஃப்ளெக்ஸி அலாய் வீல்கள், க்ரூஸ் கண்ட்ரோல், பகல் நேரங்களில் ஒளிரும் டிஆர்எல், ஆட்டோ வைபர்ஸ் மற்றும் இந்த செக்மெண்டில் ஃப்ரண்ட் பார்கிங் சென்சார் கொண்ட ஒரே காராகவும் ட்ரைபர் திகழ்கிறது.
பெரியவர்களுக்கான பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பிரிவில் 3 ஸ்டார் ரேட்டிங்கையும் ட்ரைபர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.





















