OPERATION தென் தமிழகம்! OPS-க்கு பக்கா ஸ்கெட்ச் ராஜாவை தட்டித்தூக்கிய EPS | Ramanad | Ramanathapuram | ADMK | Nagendra Sethupathy |y
ராமநாதபுர சமஸ்தான இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி நேற்று அதிமுகவில் இணைந்தது கவனம் பெற்றநிலையில் ஓபிஎஸ் அழிக்கவே இந்த அஸ்திரத்தை இபிஎஸ் கையில் எடுத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேனி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு முறை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார். ஓபிஎஸ் வெளியூரை சேர்ந்தவர் என்றாலும் ராமநாதபுரம் மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. குறிப்பாக, ராமநாதபுரத்தில் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் என்பதால் அது ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக அமையும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இருந்து முக்குலத்தோரைச் சார்ந்த சசிகலாவையும், டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்யும் நீக்கியது தென்மாவட்ட மக்கள் இடையே வெறுப்பு அரசியலாக மாறியது. மேலும் அதிமுகவின் ஓட்டுகள் பாதி அமமுகவிற்கு சென்றது. அதன்படி கடந்த ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் அதன்பலனை இந்தமுறையும் ஓபிஎஸ் அல்லப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், பாஜகவின் ஆதரவால் நிச்சயம் ஒருநாள் மீண்டும் கட்சியில் இணைந்துவிடலாம் என ஓபிஎஸ் நம்பி வந்தார். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமி கொடுக்கும் நெருக்கடியால், ஓபிஎஸ்-ஐ முற்றிலுமாகவே கழற்றிவிட பாஜக தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என, ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார். ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு எல்லாம் அனுமதி கிடைத்தது. ஆனால், மூன்று முறை தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்-ற்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மன்னர்களின் வாரிசும், மறைந்த ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதியின் மகனுமாகிய சமஸ்தான இளைய மன்னர் ராஜா நாகேந்திரன் சேதுபதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது இராமநாதபுரம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் தான் நிற்பார் என எதிர்பார்கபடும் நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சையுமான மன்னர் ராஜா நாகேந்திரன் சேதுபதியை இபிஎஸ் களமிறக்கியுள்ளது ஓபிஎஸ்க்கு நெருக்கடியை எற்படுத்து என சொல்லப்படுகிறது. இதனால் தான் இபிஎஸ் இந்த மாஸ்டர் ப்ளான் போட்டு ஓபிஎஸ் அடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.





















