மேலும் அறிய
மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தால் பெற்று தந்திருப்பேன்! ஓபிஎஸ் வெளியேற்றம்: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
ஓபிஎஸ் தரப்பில் இருந்து கேட்டால் கண்டிப்பாக பிரதமரை சந்திக்க வைப்போம் என நயினார் நாகேந்திரன் மதுரையில் பேட்டி.

நயினார் நாகேந்திரன் பேட்டி
Source : whats app
மோடியை சந்திக்க என்னிடம் சொல்லியிருந்தால் நான் அனுமதி வாங்கி தந்திருப்பேன். ஓ.பி.எஸ்., வெளியேற்றம் பலவீனமா என்பது தேர்தலில் தான் தெரிய வரும். மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.
பா.ஜ.க., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை ஆலோசனைக் கூட்டத்தில்
மதுரை சிந்தாமணி பகுதியில் 2029 நாடாளுமன்ற தென் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் செய்யப்பட்டது.
ஓ.பி.எஸ்., கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்த கேள்விக்கு?
ஏற்கனவே போன் மூலமாக ஓ.பி.எஸிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன். அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு ஓபிஎஸ் இடமும் தினகரன் இடமும் போனில் பேசி இருந்தேன். சட்டமன்றத்தில் சந்திக்கும் போதும் போனிலும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுக்கு வேறு எதுவும் பிரச்னையா என்பது தெரியவில்லை.
மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால் தான் வெளியேறியதாக கூறப்படுகிறது குறித்த கேள்விக்கு !
என்னிடம் சொல்லியிருந்தால் நான் அனுமதி வாங்கி தந்திருப்பேன்.
இ.பி.எஸ் அழுத்தத்தால் தான் ஓ.பி.எஸ் வெளியேறினாரா?
”அப்படி ஒன்றும் இல்லை”. ஓபிஎஸ் அப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது அதுக்கு நான் கருத்து சொல்லவில்லை.
ஓ.பி.எஸ்., வெளியேற்றம் உங்களுக்கு பலவீனமா இல்லையா என்ற கேள்விக்கு
அது தேர்தலில் தான் தெரிய வரும். முதல்வரை ஓபிஎஸ் சந்தித்தது குறித்து அது தொகுதி பிரச்சினையாக இருக்கலாம், தனிப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் என தெரிவித்தார். அவர் அறிவிப்பு வெளியிடும் வரை என்னவென்று கருத்து சொல்ல முடியாது.
மோடி மீண்டும் தமிழக வரும்போது ஓபிஎஸ்யை சந்திக்க வைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு.
ஓபிஎஸ் தரப்பில் இருந்து கேட்டால் கண்டிப்பாக சந்திக்க வைப்போம். என்றார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் ஓ.பி.எஸ்., குறித்த கேள்களுக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















