4 மணி நேர மீட்டிங்! ஸ்டாலின் வீட்டில் OPS! பின்னணி என்ன?
ஒரே நாளில் 2வது முறையாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார் இபிஎஸ். சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதியும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும் உடனிருந்தனர். சில கணக்குகளை போட்டு தான் ஓபிஎஸ் இந்த சந்திப்பை நடத்துவதாக பேச்சு அடிபடுகிறது.
அதிமுக பாஜக கூட்டணியில் என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டார் ஓபிஎஸ். அதிமுகவினர் மீண்டும் ஒன்றுசேர வேண்டும் என ஓபிஎஸ் வெளிப்படையாகவே சொல்லி வந்தும் இபிஎஸ் இறங்கி வரவில்லை. ஓபிஎஸ்-ன் அடுத்த மூவ் என்ன என்று பேச்சு ஆரம்பமான நேரத்தில், பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார் ஓபிஎஸ்.
ஆனால் அதற்கு முன்பே காலை நடைபயிற்சியின் போது முதலமைச்சர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தது பேசுபொருளாக மாறியது. அடுத்த சில மணி நேரங்களிலேயே ஓபிஎஸ் கூட்டணி முறிவை அறிவித்ததால் அவர் திமுக கூட்டணி பக்கம் சாய்கிறாரா என்ற கேள்வி வந்தது. ஆனால் முதலமைச்சரை சந்தித்தது தற்செயலானது என ஓபிஎஸ்-யே விளக்கம் கொடுத்தார்.
இந்தநிலையில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் நேரில் சென்று சந்தித்துள்ளார். சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி, ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காகவும், மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகவும் சந்தித்ததாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரே நாளில் 2 முறை சந்தித்துள்ளது விவாதமாக மாறியுள்ளது.
எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்ட போது, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பனும் இல்லை. தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என சொல்லி ட்விஸ்ட் கொடுத்தார். அதிமுக பாஜக கூட்டணியால் அப்செட்டில் இருக்கும் ஓபிஎஸ், தனது செல்வாக்கை காட்டுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்கின்றனர். அதிமுக பாஜகவை தாண்டி தனக்கு கூட்டணிக்கான கதவுகள் வேறு பக்கங்களிலும் திறந்திருக்கின்றன என்பதை காட்டும் வகையில் ஓபிஎஸ் இந்த சந்திப்பை நடத்துவதாக பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமல்லாமல் தவெகவுடன் ஓபிஎஸ் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்கின்றனர். இனி எந்த கூட்டணிக்கு சென்றாலும் தனக்கு தேவையான தொகுதிகளை வாங்கிவிட வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார் ஓபிஎஸ். தவெக மட்டுமே நாங்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்தினால் தான் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் தங்களுக்கு சாதகமான முடிவு இருக்கும் என கணக்கு போட்டு ஓபிஎஸ் காய் நகர்த்துவதாக தெரிகிறது. அதோடு சேர்த்து தனது மகனின் அரசியல் எதிர்காலத்தையும் மனதில் வைத்து ஓபிஎஸ் அடியெடுத்து வைக்க ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர்.





















