ஊரை விட்டு ஒதுக்கிய சாதியவாதி கதறும் பெண் நடவடிக்கை எடுக்குமா அரசு? | DMK
விழுப்புரம் மாவட்டத்தில் மீனவ சமூகத்தை சேர்ந்த பெண் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கடலுக்குள் மீன் பிடிக்க போக கூடாது என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள மண்டவாய்புதுக்குப்பம் கிராமத்தில் வசிக்கும் அங்கமுத்துவும் நாராயணபுரத்தை சார்ந்த தாமரைக்கண்ணன் ஆகிய இருவரும் பத்து வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். அங்கமுத்து என்ற பெண் மீனவ சமூகத்தை சார்ந்தவர் என்பதாலும் அவரது கண்வர் வன்னியர் சமூகத்தை சார்ந்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஊர் பஞ்சாயத்தார் சில வருடங்களாக மண்டவாய்புதுக்குப்பத்தில் வசிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் அங்கமுத்து குடும்பத்தினரை ஊரை விட்டு பஞ்சாயத்தார் ஒதுக்கி வைத்து கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது குடிநீர், பால் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்களை உள்ளூர் கிராமத்தில் உள்ள கடைகள் விற்பனையாளர்கள் வழங்க கூடாது என உத்தரவிட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட அங்கமுத்து குழந்தையுடன் கண்ணீர் மல்க விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.





















