ஹை ஜாலி.. ஆகஸ்ட் மாதத்தில் 8 விடுமுறை நாட்களா? மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்
ஆகஸ்ட் மாதத்தில் ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி மற்றும் சுதந்திர தினம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாதம் பிறந்துவிட்டாலே குழந்தைகள் முதலில் தேடுவது விடுமுறையைத்தான். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் இன்று பிறந்துள்ளது. இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு என்னென்ன விடுமுறை நாட்கள் வருகின்றன? பார்க்கலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் என்னென்ன விடுமுறை?
நீண்ட கோடைக்கால விடுப்பு முடிந்து மாணவர்கள் ஜூன் மாதம் புதிய கல்வி ஆண்டில் புதிய வகுப்புகளில் சேர பள்ளிகளுக்குத் திரும்பினர். ஜூன் மாதம் பள்ளிகள் செயல்பட்ட நிலையில், தொடர்ந்து ஜூலை மாதமும் முடிந்துவிட்டது. ஆகஸ்ட் மாதமும் தொடங்கியுள்ள நிலையில் இந்த மாதத்தில் தேசிய அளவிலும் கலாச்சார ரீதியாகவும் நிறைய விடுமுறைகள் அளிக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி மற்றும் சுதந்திர தினம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. என்னென்ன நாட்கள் அவை? பார்க்கலாம்.
ஆகஸ்ட் 3- ஞாயிறு வார விடுமுறை
ஆகஸ்ட் 9- சனிக்கிழமை ரக்ஷா பந்தன்
ஆகஸ்ட் 10- ஞாயிறு வார விடுமுறை
ஆகஸ்ட் 15- வெள்ளி- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16- சனி - கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 17- ஞாயிறு வார விடுமுறை
ஆகஸ்ட் 27- புதன் – விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்ட் 31- ஞாயிறு வார விடுமுறை
இந்த மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை வருகிறது என்பதால், மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.





















