தற்கொலை செய்துகொண்ட காதலி; சிக்கிய வீடியோ! காதலனுக்கு செக்! என்ன நடந்தது?
22 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 24 வயது காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

22 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 24 வயது காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி, 24 வயதான சமய் தலவி மீது அம்போலி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 22 வயதான ஷர்மின் ரோட்ரிக்ஸ் மார்ச் 23 அன்று தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. அவரது தாயார் சமய் மீது புகார் அளித்தார்.
24 வயது இளைஞர் சமய். 22 வயது இளம்பெண் ஷர்மின் . இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக உறவில் இருந்துள்ளனர். ஆனால் ஷர்மினை திருமணம் செய்ய மறுத்ததாலேயே ஷர்மின் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் அளித்த புகாரில், “ஷர்மினும் சமயும் ஒரு உறவில் இருந்தனர். ஆனால் அவர் அவளை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இந்த உறவின் காரணமாக ஷர்மின் இரண்டு கருக்கலைப்புகளை செய்து கொண்டார். சமய் மதுவுக்கு அடிமையானவர். இருவருக்கும் இடையே தொடர்ந்து வரும் பிரச்சினைகள் தனது மகளை இந்த கடுமையான நடவடிக்கைக்கு இட்டுச் சென்றது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து ஏப்ரல் 2 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
FIR இன் படி, இறந்த ஷர்மின், தனது தாய் மற்றும் சகோதரியுடன் அந்தேரி மேற்கில் வசித்து வந்தார். 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு, கல்லூரி படிப்பை விட்டு வெளியேறி ஒரு சட்ட நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார். இருப்பினும், அவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தனது வேலையை விட்டுவிட்டார். இதற்கிடையில், அவர் தனது தாய்க்கு உதவியாக இருந்தார்.இளம்பெண்ணின் தாயார் ஒரு டிபன் செண்டர் நடத்துகிறார்.
ஒரே பகுதியில் வசித்து வந்த ஷர்மினும் சமேயும் நண்பர்களாகி, இறுதியில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் உறவில் ஈடுபட்டனர். அவர்களது உறவின் போது, ஷர்மின் பெரும்பாலும் சமய்க்கு பணம் கொடுத்து ஆதரவாக இருந்துள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான சமய், ஷர்மினுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த சமய், தனது தந்தைவழி அத்தை நேஹா சாவந்துடன் வசித்து வந்தார். ஷர்மின் அவரது அத்தையிடம் தங்கள் திருமணம் குறித்து பேசுமாறு கேட்டிருந்தார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, ஷர்மினின் தாய் அவரது அத்தையின் வீட்டிற்கு இந்த திருமண திட்டத்தைப் பற்றி பேச சென்றிருந்தார். ஆனால் ஷர்மின் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அத்தை அதை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. தனது அத்தையின் ஒப்புதலுடன் மட்டுமே திருமணத்தைத் தொடர முடியும் என்று கூறி, சமய் தொடர்ந்து திருமணத்தைத் தவிர்த்து வந்துள்ளார்.
இதற்கிடையில், அவர் ஷர்மினை தொடர்ந்து சந்தித்து, அவளிடம் பணம் கேட்டு, அவளை உடல் ரீதியாக தாக்கி, கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனக்கு அனுப்புமாறும் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மார்ச் 23 அன்று, ஷர்மின் வீட்டில் தனியாக இருந்தார். மாலை 5:45 மணியளவில் சர்ச்சிலிருந்து அவரது தாயாரும் சகோதரியும் திரும்பியபோது, கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். உள்ளே இருந்து எந்த பதிலும் கிடைக்காததால், கதவை உடைத்து திறக்க அண்டை வீட்டாரின் உதவியை நாடினர். அப்போது ஷர்மின் துப்பட்டாவுடன் சீலிங் ஃபேனில் தொங்குவதைக் கண்டனர். ஜூஹுவில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர். சமாய்க்கு அனுப்பப்பட்ட வீடியோ செய்தி பின்னர் அவரது மொபைல் போனில் கண்டெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவரது தாயார் புகார் அளித்தார். மேலும் அம்போலி போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்) இன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

