Year Ender Auto 2024: மைலேஜ் முக்கியம்பா..! 2024ல் எந்த புது கார் வாடிக்கையாளர்களை கவர்ந்தது? லிட்டருக்கு எவ்வளவு?
Year Ender Auto 2024 Mileage Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அறிமுகமான அதிக மைலேஜ் கொண்ட கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Year Ender Auto 2024 Mileage Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் அறிமுகமான, அதிக மைலேஜ் கொண்ட டாப் 5 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சிறந்த மைலேஜ் கொண்ட கார்கள்
இன்றைய தேதிக்கு கார் வாங்கும் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளும் அம்சங்களில் பாதுகாப்பு மற்றும் மைலேஜ் ஆகிய இரண்டும் மிக முக்கியமானவையாகும். குறிப்பாக பாதுகாப்பு அம்சம் ஒருமுறை முதலீடு என்றால், எரிபொருள் செலவு தினசரி செலவாகும். அதன் காரணமாகவே மைலேஜ் என்பது மிகவும் முக்கியம். தவறானதை தேர்ந்தெடுத்தால் எரிபொருள் செலவு உங்களுக்கு பெரும் பாரமாகலாம். நடப்பாண்டில் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த மைலேஜ் கொண்ட பல கார்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் அதிக மைலேஜ் தரக்கூடிய டாப் 5 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
2024ல் அறிமுகமான சிறந்த மைலேஜ் கொண்ட கார்கள்:
1. 2024 மாருதி ஸ்விஃப்ட்:
புதிய மாருதி ஸ்விஃப்ட் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜினை கொண்டுள்ளது. இது சிஎன்ஜி எடிஷனையும் சந்தையில் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் 82 பிஎஸ் பவரையும், 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். கார் இன்ஜினில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புதிய மாருதி ஸ்விஃப்ட் காரானது லிட்டருக்கு 25.75 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அதன் மைலேஜ் ஒரு கிலோ சிஎன்ஜியில் 32.85 கிமீ வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
2. 2024 மாருதி டிசையர்:
புதிய மாருதி டிசையரில், நிறுவனம் 4 சிலிண்டர்களுக்குப் பதிலாக 3 சிலிண்டர் இன்ஜினை பயன்படுத்தியுள்ளது. சிஎன்ஜி விருப்பத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. மைலேஜ் எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தாலும், இந்த இன்ஜின் புதிய ஸ்விஃப்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோலில் லிட்டருக்கு 25.71 கி.மீ., மைலேஜும், சிஎன்ஜியில் ஒரு கிலோவொற்கு 33.73 கிமீ வரை மைலேஜும் கிடைக்கும். இதன் விலை ரூ.6.79 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
3. டொயோட்டா அர்பன் க்ரூசர் டேசர்
மாருதி சுசூகிக்கு போட்டியாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் டேசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன் ஜினுடன் வருகிறது. இந்த காரின் அதிகபட்ச மைலேஜ் பெட்ரோலில் லிட்டருக்கு 22.8 கிமீ ஆகவும், சிஎன்ஜியில் கிலோவிற்கு 28.5 கிமீ ஆகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விலை ரூ.11.14 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
4. கியா சோனெட் 2024
புதிய கியா சோனெட் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களில் விற்பனை செய்யப்படுகிறது. மைலேஜ் பற்றி பேசினால், இதன் டீசல் இன்ஜின் லிட்டருக்கு 22.3 கிமீ என்ற சிறந்த மைலேஜை வழங்குகிறது. அதேசமயம் 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 18.83 கிமீ மைலேஜ் தருவதாகக் கூறப்படுகிறது. இதன் விலை ரூ.7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
5. புதிய ஹோண்டா அமேஸ்:
புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் CVT தானியங்கி மாறுபாடு லிட்டருக்கு 19.46 கி.மீ., மைலேஜை வழங்குகிறது. இதன் விலை ரூ.8.04 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.