உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திற்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்ததிருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அபிஷன் ஜீவிந்த். இவர் இயக்கிய முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 50 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கு மற்றொரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. வெளியான தமிழ் படங்களிலேயே இதுதான் டாப் 10 ஆர்டரில் இடம் பிடித்திருக்கிறதாம்.
பிளாக்பஸ்டர் படங்கள்
2025 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவை கலக்கிய படங்களின் பட்டியலை காணலாம். தற்போதைய சூழலில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. அந்த வகையில், குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட், ஃபேமிலி, குட் பேட் அக்லி போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. பெரிய பட்ஜெட்டில் வெளியான கேம் சேஞ்சர், ரெட்ரோ போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தன. குறைந்த பட்ஜெட்டில் வெளியான படங்கள் கோடி கணக்கில் வசூலை ஈட்டி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 91 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. தற்போது குடும்பங்கள் கொண்டாடும் படத்தையே ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். தற்போது இப்படத்திற்கு உலகளவிலும் அங்கீகாரம் கிடைத்திருப்பது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாப் 10 இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி
உலகளவில் உள்ள சினிமா விமர்சகர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்யும் முன்னணி தங்களில் Letterboxd. இந்த தளத்தில் 2025ல் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் டாப் 10 குறித்த பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், சின்னர்ஸ் திரைப்படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. டாப் 10ல் 9ஆவது இடத்தை தமிழ் திரைப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் இடம்பிடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் இடம்பிடித்த ஒரே படம் இது மட்டுமே. இப்படத்தை தமிழ் மக்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், உலக அரங்கிலும் நன்மதிப்பை பெற்றிருப்பதால் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.





















