புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
புதுச்சேரி : BSNL சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை 7ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

புதுச்சேரி: பி.எஸ்.என்.எல் BSNL சிறப்பு மேளா விற்பனை முகாம் 4 நாட்கள் நடக்கிறது. ரூ.289 மதிப்புள்ள புதிய சிம் கார்டு ரூ.100 மட்டுமே. இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜி.பி., டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அளவில்லா அழைப்புகள் இலவசம்.
இதுகுறித்து முதன்மை பொதுமேலாளர் செய்திகுறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., BSNL சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை 7-ஆம் தேதி துவங்கி, 10ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம் மேட்டுப்பாளையம், அரியாங்குப்பம், வில்லியனூர், மதகடிபட்டு, முதலியார்பேட் போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் அருகில், கரியமாணிக்கம், திருக்கனூர், ஏம்பலம், சஞ்சீவி நகர், அரும்பார்த்தபுரம், திருபுவனை, கோட்டகுப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட் ராஜூவ் பார்க் எதிரில், ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறும்.
இந்த முகாமில் ரூ.289 மதிப்புள்ள புதிய சிம் கார்டு ரூ.100 மட்டுமே. இந்த சிம் கார்டில் 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜி.பி., டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் அளவில்லா அழைப்புகள் இலவசம். வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள 4-ஜி சிம் கார்டுதானா என அறிந்து கொள்ள 9442824365 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் எப்.டி.டி.எச். FDDH மறு இணைப்பு மற்றும் நிலுவை தொகையை தள்ளுபடியில் வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் புதுச்சேரி, வில்லியனுார், மேட்டுப்பாளையம் மையங்களில் நடைபெறும். KYC update கே.ஒய்.சி., அப்டேட் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தாங்களிடம் உள்ள குறுஞ்செய்தியுடன் மேளா நடைபெறும் இடங்களை அணுகி அப்டேட் செய்து கொள்ளவும். மேற்கண்ட இடங்களில் புதிய 4ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜி.பி., இலவச டேட்டா பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.





















