Deepak Raja Profile | ரௌடியா? கொலைகாரனா?சாதித் தலைவனா..?யார் இந்த தீபக் ராஜா?
2000 போலீஸ் பாதுகாப்புக்கு நடுவே ஆயிரக்கணக்கான மக்கள் சூழ நெல்லையில் ஒரு இறுதி ஊர்வலம் நடந்து முடிந்துள்ளது பலரை ஆச்சிரியப் படுத்தியுள்ளது. இப்படி ஒரு செண்டாஃப் கொடுக்கப்பட்டது மாபெரும் தலைவருக்கோ அல்லது முக்கிய பிரமுகருக்கோ இல்லை. கொலை, கட்ட பஞ்சாயத்து ரவுடிசம் என இவர் மீது எழுதப்படாத கேஸ்களே இல்லை என்னும் கிரிமினலுக்கு தான் இப்படி ஒரு வரவேற்பு. யார் இவர்? அப்படி இவர் செய்த சம்பவங்கள் என்னென்ன? யார் இந்த ரவுடி தீபக் ராஜா என பதற வைக்கும் பின்னணியை பார்க்கலாம்...
சாதி ரீதியான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சொல்கிறது. அதிலும் நெல்லை தூத்துக்குடி மாவட்டம் முக்கிய பங்கு வகிகறது. கராத்தே செல்வின், பசுபதி பாண்டியன், வெங்கடேஷ் பண்ணையார், சுபாஷ் பண்ணையார், ராக்கெட் ராஜா போன்ற பல்வேறு சாதி அமைப்பு தலைவர்கள் குற்ற பின்னணியோடு தென் மாவட்டங்களில் வலம் வந்தனர்.இதில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த பசுபதி பாண்டியனுக்கும், வெங்கடேஷ் பண்ணையாருக்கும் இடையே பகை இருந்ததாக கூறப்படுகிறது. வெங்கடேஷ் பண்ணையாரின் மறைவுக்கு பிறகு இந்த பகையின் வெளிப்பாடாக இரு தரப்பினருக்கும் நடுவே மோதல் வெடித்தது.
மேலும் 2012 ஆம் ஆண்டு தீபக் ராஜா பசுபதி பண்டியனுக்கு ஆதரவக இருந்த சமயத்தில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டார். தனது தலைவர் கொலை செய்தவனை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஒரு பக்கம் தீபக் ராஜா பசுபதி பாண்டியன் மறைவுக்குப் பிறகு தனது தேவேந்திர குல வேளாலர் சமுதாய மக்களுக்காக குரல் கொடுக்கும் நபராக வளர்ந்து வந்தார். மேலும், நெல்லையைச் சேர்ந்த கண்ணபிரானுடன் இணைந்து பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில், ஒரு கட்டத்தில் தீபக் ராஜா கண்ணபிரானை பிரிந்து தனி ஆளாக தனக்குப் பின்னால் சிலரை வைத்துக்கொண்டு ஒரு தலைவரைப் போன்று ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்ற பொது மேடைகளில் பேசுவது, தனது சமுதாயத்தில் யாராவது இறந்தால் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவது என பல செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், தனது சமுதாய இளைஞர்களை நன்றாக படிக்கும் படியும், உங்களுக்காக தான் நாங்கள் களத்தில் இறங்கி வேலை செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் தலைமறைவான வாழ்க்கையையே வாழ்ந்து வந்த தீபக் ராஜா, மறைமுகமாக ஒரு பெரிய சாதி தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். மறுபுறம் பழி வாங்கும் படலத்தை தொடர்ந்து வந்தவர், அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டு அருகே நடைபெற்ற இரட்டை கொலை, நெல்லை தாழையூயத்தில் நடைபெற்ற கட்டிட காண்ட்ராக்டர் கண்ணன் கொலை என பல கொலை வழக்கில் சம்பந்தப்பட்டார். அதேபோல், சமூக வலைத்தளங்களில் தனது சமூகத்துக்கு எதிராக நினைப்பவர்களை மறைமுகமாக ஆக்ரோஷமாக பேசியும் வந்துள்ளார்.
இந்தநிலையில் தான் சுபாஷ் பண்ணையாரை தீர்த்துக்கட்ட ஒரு கும்பல் முயன்ற போது சுபாஷ் பண்ணையார் தப்பித்த நிலையில் சுபாஷ் பண்ணையாரின் ஆதரவாளர்கள் இரண்டு பெயரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது. அந்த கும்பலில் தீபக் ராஜாவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்ற காரணத்தால் அவ்வளவு கவனமாக இருந்த தீபக் ராஜா, தனது காதலி அழைத்தால் தனிமையில் சந்திக்க தனியாக வந்த போது மர்ம் கும்பலிடம் சிக்கிக் கொண்ட தீபக் ராஜாவை அரிவாலால் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
எனவே, தீபக் ராஜா பழிக்குப் பழியாக கொல்லப்பட்டாரா என கேள்வி எழுந்துள்ளது.மேலும், கொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவுக்கு தனது காதலியோடு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.