மேலும் அறிய
பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. மாணவர்களுக்கு சந்தனம், சாக்லேட், ரோஜா கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் மற்றும் சாக்லேட், குங்குமம், சந்தனம் வழங்கி வரவேற்ற மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்.

பள்ளி மாணவிகள்
Source : whats app
பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்கு பின்பு இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 530க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதலே ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை முதல் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்த மாணவிகள் தங்களது நண்பர்களை பார்த்து மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
சாக்லேட்கள், இனிப்புகள், குங்குமம், சந்தனம் - கொடுத்து வரவேற்பு
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் கைகளில் பூக்கள் கொடுத்தும், சாக்லேட்கள், இனிப்புகள், குங்குமம், சந்தனம் வழங்கியும் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் சிறப்பாக பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
பள்ளிக்கு அழைத்துவந்தனர்
பள்ளி திறக்கப்பட்டதையடுத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பள்ளியில் தேவையான குடிநீர் கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளிகள் மறுதிறப்பை முன்னிட்டு முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு பள்ளிகளிலும் நேரடியாக ஆய்வுகள் மேற்கொண்டனர். கோடை வெயிலின் தாக்கம் மதுரையில் தற்போதும் அதிகரித்து வரக்கூடிய நிலையில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கும் மின்சாரம் தடை இன்றி கிடைப்பதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு அதனை கண்காணித்து வருகின்றனர். பள்ளிக்கு புதிதாக சேர்க்கையில் சேர்ந்து வருகை தந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு அழைத்துவந்தனர்.
மாணவிகள் மகிழ்ச்சி
கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தனது நண்பர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் பள்ளிக்கு மீண்டும் வரும்போது ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















