Pandian Stores: திருடனாக மாறிய குமாரவேல்! மீனா போடும் புது பிளான்.. பரபரப்பான காட்சிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 495ஆவது எபிசோடில் பாண்டியன் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் அனைவரும் அழுது புலம்பும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில், இன்றைய 495ஆவது எபிசோடானது கோமதி அழுது புலம்பும் காட்சிகளுடன் தொடங்குகிறது. அரசியின் ரகசிய திருமணத்திற்கு பிறகு பாண்டியனின் வீட்டில் யாரும் சாப்பிடவில்லை. அப்படியிருக்கும் போது கோமதிக்காக செந்தில் சாப்பாடு எடுத்து வந்து கொடுக்கிறார். அரசி ஏன் இப்படி செய்தாள், எதற்காக இப்படி செய்தாள், அப்போ நம்மிடம் நடித்துக் கொண்டிருந்தாளா? என்றெல்லாம் தங்களுக்குள்ளாக கேள்வி மேல் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
கோமதி, செந்தில், மீனா ஒரு புறம் அழுது புலம்பும் நிலையில் மற்றொரு புறம் கதிர் மற்றும் ராஜீயும் அழுது புலம்புகிறார்கள். அரசி இப்படி செய்திருக்கமாட்டாள். குமாரவேல் தான் கட்டாயப்படுத்தி திருமணம் செய்திருப்பான் என்று புலம்புகிறார்கள். அப்பா தினமும் குடிப்பார். ஆனால், மீனா அண்ணி வீட்டிற்கு வந்த பிறகு அவர் குடிப்பதில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். அரசிக்காக அப்பா நல்லா மாப்பிள்ளை பார்த்திருந்தார். ஆனால், இப்படி செய்வாள் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அரசிக்கு எந்தவிதத்திலும் அவன் பொருத்தமே இல்லை. கேடு கெட்டவன் அப்படி இப்படி என்று புலம்புகிறார். ஆனால், குமார் இருக்கும் அதே வீட்டில் தான் அம்மா, சித்தி, அப்பத்தா என்று எல்லோரும் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வரையில் அரசிக்கு ஒன்றும் ஆகாது என்று ராஜீ ஆறுதலாக பேசுகிறார்.
இப்படி ஆளாளுக்கு பாண்டியன் வீட்டில் பேசிக் கொண்டிருக்க பாண்டியனோ தூங்கி எழுந்து கடைக்கு கிளம்பி வருகிறார். பழனிவேல், பாண்டியனை கடைக்கு வர வேண்டாம் என்று கூறுகிறார். மண்டபத்திற்கு சாமான் நான் அனுப்பிக்கிறேன் என்கிறார். ஆனால், பாண்டியன் எதுவும் கேட்காமல் கடை சாவியை எடுத்துக் கொண்டு கடைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அவருக்கு சுகர் ஏதும் இல்லை. அதனால் 2 வேளை சாப்பிடவில்லை என்றால் எதுவும் ஆகாது.
எனக்கு தான் சுகர் இருக்கு. நான் சாப்பிடவில்லை என்றால் எனக்கு ஏதாவது ஆகிவிடும் என்று கோமதி பேசுகிறார். அடுத்ததாக பழனிவேலுவிடம் நான் அரசியிடம் பேச வேண்டும். சித்தப்பா நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். நடந்த கல்யாணத்தில் எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு. அம்மன் கோயிலுக்கு வர சொல்லுங்க என்று கூறுகிறார்.

இறுதியாக கத்தியை காட்டி குமாரவேலுவை மிரட்டி வந்த அரசிக்கு தெரியாமல் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை குமாரவேல் திருட்டுத்தனமாக எடுத்துவிட்டார். இதை வைத்து தானே என்னை மிரட்டின. இப்போது என்ன செய்வ என்று கத்தியை வைத்துக் கொண்டு கேட்கிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இனி நாளை என்ன நடக்கும் என்பது போன்று பல சுவாரஸ்யங்களுடன் காட்சிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நகர்ந்து வருகிறது. மீனா கேட்டபடி பழனிவேல் அரசியை கூட்டி வந்தாரா? தன்னிடம் உள்ள அனைத்து கேள்விகளையும், சந்தேகங்களையும் மீனா கேட்டாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.





















