JInn - The Pet review : முகேன் ராவ் நடித்துள்ள ஜின் திரைப்பட விமர்சனம்
JInn - The Pet review : முகேன் ராவ் நடித்து டி.ஆர் பாலா இயக்கியுள்ள ஜின் - தி பெட் படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்

ஜின் - தி பெட்
'பிக் பாஸ் சீசன் 3' வெற்றியாளரும், 'வேலன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜின்' பெட்’. பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, 'நிழல்கள்' ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். டி.ஆர் பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார். கடந்த மே 30 ஆம் திரையரங்கில் வெளியான இந்த படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்
ஜின் - தி பெட் விமர்சனம்
மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வரும் முகேன் ராவ் வீட்டில் வளர்க்கக் கூடிய ஜின் என்கிற பேயை கொண்டு வருகிறார். அதை ஒரு பெட்டிக்குள் வைத்து அதற்கு உணவளித்து வளர்த்து வருகிறார். ஜின் வீட்டிற்கு வந்த நேரம் அவருக்கு சில நல்லது நடக்கின்றன. அதே நேரம் அவரது குடும்பத்தினர் எதிர்பாராத கேட்ட நிகழ்வுகளை சந்திக்கிறார்கள். இப்படியான நிலையில் ஒரு நாள் வீட்டிற்கு திரும்பும் முகேன் தனது மனைவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை காண்கிறார். ஜின் தான் அவரை கொல்ல முயற்சி செய்ததாக நினைத்து அதை வெளியே வீசுகிறார். சில நாட்கள் கழிந்து தனது. மனைவியை கொல்ல வந்தது ஜின் இல்லை வேறு ஒன்று என்று தெரிந்துகொள்கிறார். இதன் பின் என்ன நடந்தது என்பதே கதை
ஹாரர் , காமெடி , ஃபேண்டஸி அம்சங்களை வைத்து சுவாரஸ்யமான ஒரு கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் டி.ஆர் பாலா. ஜின் வரும் காட்சிகள் , பால சரவணனின் காமெடி காட்சிகள் , முகேன் மற்றும் அவரது மனைவி இடையிலான காதல் காட்சிகள் நன்றாக வர்க் அவுட் ஆகியிருக்கின்றன. ஆனால் இரண்டாம் பாதியில் மையக்கதையை விட்டு பல திசைகளில் செல்லும் திரைக்கதை படத்திற்கு பெரிய மைனஸாக அமைந்திருக்கிறது. விவேக் மெர்வினின் பின்னணி இசை மற்றும் அர்ஜூன் ராதாவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு புதுமையை சேர்த்திருக்கின்றன. நல்ல கான்செப்ட் என்றாலும் திரைக்கதையில் கூடுதல் கவனமும் நடிகர்களின் நடிப்பில் கூடுதல் கவன்ம் செலுத்தியிருக்கலாம்.





















