Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
கேரளாவில், 10 கோடி ரூபாய் முதல் பரிசை கொண்ட மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட்டை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. அது குறித்த முழு விவரங்களை காணலாம்.

கேரளாவில் விஷூ பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக, 10 கோடி ரூபாய் முதல் பரிசுத் தொகை கொண்ட மான்சூன் பம்பர் லாட்டரியை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த விவரங்கள் இதோ.
கேரள அலரசின் லாட்டரிகள்
கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட மான்சூன் பம்பர் லாட்டரி அறிமுகம்
கேரளாவில் விஷூ பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் கடந்த 28-ம் தேதி முடிந்த நிலையில், அதில் முதல் பரிசான 12 கோடி ரூபாய், VD 204266 என்ற எண்ணிற்கு விழுந்தது. கோழிக்கோடில் வாங்கப்பட்ட டிக்கெட்டிற்கு இந்த முதல் பரிசு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக 10 கோடி ரூபாய் முதல் பரிசுத் தொகை கொண்ட மான்சூன் பம்பர் லாட்டரியை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு லாட்டரி டிக்கெட்டின் விலை 250 ரூபாய் ஆகும்.
மொத்த 5 சீரிஸ்களில் இந்த லாட்டரி டிக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த லாட்டரியில், 2-ம் பரிசாக 6 டிக்கெட்டுகளுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. 3-வது பரிசாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
4-வது பரிசாக 3 லட்சம் ரூபாயும், இது இல்லாமல், ரூ.5,000, ரூ.1,500, ரூ.250 ஆகிய பரிசுத் தொகைகளும் வழங்கப்படுகின்றன. இதனால், இதன் விற்பனை நன்றாக இருக்கும் என எண்ணும் கேரள அரசு, பல லட்சம் லாட்டரி டிக்கெட்டுகளை அச்சிட்டு, பல கோடி ரூபாய் வருவாயை ஈட்ட முடிவு செய்துள்ளது.
இந்த மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல், வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. முதல் பரிசு 10 கோடி ரூபாய் என்பதால், கேரளா மட்டுமல்லாமல், பல மாநில லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வெளி மாநிலங்களிலிருநது கேரளா சென்று வருபவர்களும் இந்த லாட்டரிகளை வாங்குகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, லாட்டரிகள் தடை செய்யப்பட்டுள்ளதால், இங்குள்ளவர்கள் கேரள லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















