Ilaiyaraaja: பிறந்தநாளில் இளையராஜா கொடுத்த இசை ட்ரீட்! திக்குமுக்காடிய ரசிகர்கள் - முதல்வரிடம் இருந்து வந்த வாழ்த்து!
இசைஞானி இளையராஜா இன்று தன்னுடைய 81 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள ஏராளமான ரசிகர்களை தன்னுடைய இசையால் மகிழ்வித்து வருபவர் தான் இளையராஜா. தன்னுடைய அண்ணன் வைத்திருந்த பாவலர் இசை குழுவில் இசையமைத்து வந்த இளையராஜா. தன்னுடைய அம்மா ஆசையாக வைத்திருந்த ரேடியோ பெட்டியை விற்று கொடுத்த காசை கையில் வைத்து கொண்டு, தன்னுடைய சகோதரர்களுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
பின்னர் வாய்ப்பு கேட்டு பல இடங்களில் ஏறி இறங்கினார். அந்த சமயத்தில் தான், இயக்குனர் தேவராஜ் மோகன் இயக்கத்தில், 1976 ஆம் ஆண்டு சிவக்குமார் - சுஜாதா நடிப்பில் வெளியான 'அன்னக்கிளி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இளையராஜா, இந்த படத்தின் இசைக்காகவும், பாடலுக்காகவும் பிரபலமானார். குறிப்பாக இந்த படத்தில் இவர் இசையில் இடம்பெற்ற, 'அன்னக்கிளி', 'மச்சானை பாத்தீங்களா' 'அடி ராக்காயி' ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து, இசையமைப்பாளராக அறிமுகமான அதே ஆண்டு மொத்தம் 4 படத்தில் இசையமைத்தார். அடுத்தடுத்த வருடங்களில் இவர் இசையில் வெளியான பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவியது. எனவே ஒரே வருடத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்களுக்கு கூட இசையமைத்தார். மேலும் எம் ஜி ஆர், சிவாஜி, முத்து ராமன், கார்த்திக், பிரபு, விஜயகாந்த், அஜித், விஜய், விஜய் சேதுபதி, விக்ரம், என சுமார் 4 தலைமுறை ஹீரோக்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதுவரை சுமார் 1000 திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா பல்வேறு விருதுகளை வென்றவர். இவரது இசை பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக, இந்தியாவில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதே போல் இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இசையராஜா தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, "என்னுடைய பிறந்தநாள் அன்று உங்களுக்கு ஒரு இனிய செய்தியை நான் அறிவிக்க நினைக்கிறன். அது என்னவென்றால், வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி, நான் லண்டலின் இசையமைத்த அந்த இசை நிகழ்ச்சியை, அதே ஆர்கெஸ்டரா லண்டனை சேர்ந்தவர்களே இங்கு வந்து, என்னுடைய மகளுக்கு, என் நாட்டு மகளுக்கு அவர்கள் முன் இசையமைக்க உள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இதற்கு முதல்வர் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியை இங்கு படிக்கிறேன் . தங்களின் சிம்பொனி இசை இசைக்க உள்ள ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்காக கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதே போல் நேற்றும், இன்றும், என்றும் தங்களின் இசை ராஜாகத்தின் ஆட்சி தான் என்றும் முதல்வன் கூறி இருக்கிறார். நீங்கள் இதை கேட்க வேண்டும் என்பதே என ஆசை என இளையராஜா கூறியுள்ளார்". இந்த தகவல் இளையராஜா அவரது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு கொடுத்த ட்ரீட் ஆகவே பார்க்கப்படுகிறது.





















