Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் தொடரும் மழை.. மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சென்னையில் இனி 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதங்கள் விதிக்க போக்குவரத்து போலீசாருக்கு சென்னையில் அனுமதி - காவல் ஆணையர் அருண்
கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
கடந்த 24 மணி நேரத்தில் ஆற்காட்டில் 14 செ.மீட்டர் மழை; அரக்கோணத்தில் 12 செ.மீட்டர் மழை
தென்மேற்கு பருவமழை கணித்ததை விட 4 நாட்களுக்கு முன்பே தொடங்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
ஒகேனக்கல் காவிரி ஆற்று நீர்வரத்து அதிகரிப்பு; விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 4 மாதத்தில் ரேஷன் அரிசி கடத்திய 3 ஆயிரத்து 232 பேர் கைது
பொறியியல் படிப்புகளில் சேர 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு - தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளிலும் ஆர்வம்
சென்னை கத்திப்பாராவில் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான கார் - 4 பேருக்கு காயம்
அதிமுக-வைப் பற்றி பேசுவதற்கு ஆதவ் அர்ஜுனாவிற்கு தகுதி இல்லை - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
அரக்கோணம் பாலியல் வன்கொடுமை விவகாரம்; அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
அரக்கோணம் பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசியல் கட்சியினர் தலையீட்டிற்கு பிறகே வழக்குப்பதிவு என்பது தவறு - காவல்துறை விளக்கம்
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 1760 உயர்ந்ததால் மீண்டும் தங்கம் விலை 71 ஆயிரத்தை கடந்தது
மறைந்த பிரபல கார் பந்தய வீரர் அயர்டன் சென்னா சிலைக்கு அஜித்குமார் மரியாதை



















