Mumbai Weather: வான்கடேவில் விளையாடப் போகும் மழை.. மும்பை - டெல்லி மேட்ச்க்கு கோவிந்தாவா? வெதர் ரிப்போர்ட்
IPL 2025 MI vs DC: ப்ளே ஆஃப்க்கு செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் மும்பை - டெல்லி போட்டி மழையால் ரத்தாவதற்கு வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத், பெங்களூர், பஞ்சாப் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் எஞ்சிய ஒரு இடத்திற்கு மும்பையும், டெல்லியும் மல்லுகட்டி வருகிறது.
ப்ளே ஆஃப்க்கான நாக் அவுட்:
ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் நாக் அவுட் போட்டியாக மாறியுள்ள இன்றைய லீக் போட்டியில் மும்பை - டெல்லி வான்கடே மைதானத்தில் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
போட்டி நடக்குமா?
இந்த நிலையில், மும்பையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால், மும்பையில் இன்று போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி இன்று மும்பையில் 80 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.
இந்த மழையானது 50 சதவீதமாக மாலை குறைய வாய்ப்பு உள்ளது. இன்று முழுவதுமே வானம் மேகமூட்டமாகவே காணப்படும் என்றே வானிலை மையம் கணித்துள்ளது. இன்றைய போட்டி மழை காரணமாக முழுவதும் ரத்தாக வாய்ப்பு அதிகளவில் இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரம்:
பெங்களூர் சின்னசாமி மைதானம் போல மும்பையில் மழைநீரை வடியவைக்கும் வசதிகள் போதியளவு இல்லை. இதனால், மழை நீர் தேங்கினால் அதை வடியவைப்பதற்கும் அதிக நேரம் எடுக்கும். இதனால், மழை பெய்தால் இன்றைய போட்டி நடப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு ஆகும்.
ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை 10.56 மணி வரை போட்டி நடத்துவதற்காக கடைசி நேரமாக குறிப்பிட்டிருந்த நிலையில் இரவு 11.56 மணி கடைசி நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இரவு 11.56 மணி வரை பொறுத்திருந்து பார்க்கப்பட்டு போட்டி 5 ஓவர் ஆட்டமாக நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
பஞ்சாப் கைகளில்:
ஒருவேளை இன்றைய போட்டி மழையால் ரத்தானால், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளில் ப்ளே ஆஃப்க்கு செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிப்பது பஞ்சாபின் கையில் அடங்கும். அந்த அணிக்கு எதிரான போட்டியின் முடிவைப் பொறுத்தே ப்ளே ஆஃப்க்குச் செல்லப்போவது யார்? என்பது தீர்மானிக்கப்படும். ஒரு வேளை இன்றைய போட்டி நடக்காமல் போனால் பஞ்சாப் அணியுடனான போட்டியில் மும்பை வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறும். இன்றைய போட்டி நடக்காத பட்சத்தில் பஞ்சாப் அணியுடனான போட்டியில் டெல்லி வெற்றி பெற்று, பஞ்சாப் மும்பையை வீழ்த்தினால் டெல்லி அணி ப்ளே ஆஃப்-க்கு தகுதி பெறும்.




















