Thug Life Cast Salary: 'தக் லைஃப்' படத்திற்காக த்ரிஷாவுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்! யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
'தக் லைஃப்' படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா, சிம்பு, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட அனைவருக்கும் எத்தனை கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும், நடிகை த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் ஹாசன் மற்றும் சிம்புவுடன் நடித்துள்ள திரைப்படம் தான் 'தக் லைஃப்'. இந்த ஆண்டு த்ரிஷா நடிப்பில் வெளியான 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லீ' ஆகிய இரண்டு படங்களிலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தால் இந்த இரு படங்களுமே அதீத எதிர்பார்ப்பு நிலவியது. இதில் விடாமுயற்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், குட் பேட் அக்லீ அஜித் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்டாக அமைந்தது.
அதே போல் அஜித்தின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் 'குட் பேட் அக்லீ' என திரைப்பட வர்த்தக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் இப்படத்திற்கு போதிய எதிர்பார்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர் இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் 'தக் லைஃப்'. கமல் ஹாசன் - சிம்பு, அப்பா - மகன் கதாபாத்திரத்தில் நடிக்க, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர், வையாபுரி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், வரும் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் தான் கன்னட மொழியானது தமிழ் மொழியிலிருந்து வந்தது தான் என்று கமல் ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னடர்கள் கூறி வந்தாலும், அதற்க்கு வாய்ப்பே இல்லை என்பதில் கமல் தெளிவாக உள்ளார். எனவே தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளனர். இதனால் தக் லைஃப் படக்குழுவுக்கு 20 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் நடித்துள்ள பிரபலங்களின் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. தக் லைஃப் படத்தில், இந்திராணி என்கிற பாடகி கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷாவிற்கு ரூ.12 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்னதாக த்ரிஷா நடித்த குட் பேட் அக்லீ படத்திற்கு அவருக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் படத்தைவிட இந்தப் படத்திற்கு த்ரிஷாவிற்கு 3 மடங்கு அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை தவிர சிம்புவிற்கு ரூ.40 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அசோக் செல்வனுக்கும், நடிகர் ஜோஜூ ஜார்ஜிற்கு தலா ரூ.1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அபிராமிக்கு ரூ.50 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருகிறது. கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் அவர்கள் இந்தப் படத்தின் லாபத்திலிருந்து வரும் தொகையை பங்கிட்டு கொள்வார்கள். ஆதலால் அவர்கள் இந்தப் படத்திற்கு என்று தனியாக சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















