Karthigai Deepam: ரேவதியின் வாயைப் பொத்தி.. மகேஷ் செய்த காரியத்தால் திக் திக்! சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் இன்று முதல் ஒரு மணி நேரம் எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது.
நேற்று நடந்த முடிந்த சண்டே ஸ்பெஷல் எபிசோடில் ஹாஸ்பிடலில் கண்விழித்த மகேஷ் மாயாவை பார்க்க கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மயங்கி விழுந்த மகேஷ்:
அதாவது மகேஷ் ஆட்டோவில் வந்து கொண்டிருக்க அப்போது சாமுண்டீஸ்வரிக்கும் ராஜராஜனுக்கும் கல்யாண நாள் கொண்டாட்டம் நடப்பது அறிந்து கொண்டே மண்டபத்திற்கு வருகிறான். யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழையும் மகேஷ் ரேவதி வாயைப் பற்றி தனியாக அழைத்துச் சென்று அவளிடம் பேச இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. மகேஷ் மயங்கி விழுகிறான்.
அடுத்ததாக மறுபக்கம் ஊரில் கலச பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க எல்லோரும் பரமேஸ்வரி பாட்டியிடம் உங்க பேரன் எங்கே என கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்க பார்த்து கார்த்திக்கு போன் போட்டு விசாரிக்கிறாள். பிறகு கார்த்திக் மற்றும் மயில்வாகனம் திட்டம் போட்டு வெளியே வர சந்திரகலா கார்த்தியை சிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்கிறாள்.
சந்திரகலா சதியை முறியடிக்கும் கார்த்திக்:
ரூமுக்குள் இருக்கும் ராஜராஜனிடம் கார்த்திக் குறித்து விசாரிக்க அவர் பாத்ரூமில் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். ஆனால் சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் கார்த்திக் இல்லை என்று சொல்லி கோர்த்து விட முயற்சி செய்ய, மண்டபத்தின் பின்பக்கமாக உள்ளே நுழையும் கார்த்திக் சந்திரகலாவின் திட்டத்தை தவிடு பொடியாக்குகிறான்.
அதன் பிறகு கார்த்திக் சந்திரகலாவுடன் உங்களால் என்னை சிக்க வைக்க முடியாது என சவால் விடுகிறான். சிவனாண்டி விருமனுக்கு போன் போட்டு கார்த்திக் கலச பூஜைக்கு வந்தால் தகவல் கொடுக்கும்படி சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















