TVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்
த.வெ.க. தலைவர் விஜய் ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். எதற்காக விஜய் ராணுவ வீரர்களை சந்தித்து என்ன பேசியுள்ளார் என தெரியாமல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது..
தமிழ் திரையுலகின் உச்சபட்ச நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் மீது ஆர்வத்துடன் காணப்பட்டு வந்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் யாருக்கும் தங்களது ஆதரவு இல்லை என்ற அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார். மேலும், 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் என்ற அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது முடிந்தது. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்று அவரது ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் மற்ற அரசியல் கட்சியினரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். த.வெ.க.வின் கொள்கைகள், செயல்திட்டங்களை கூறிய விஜய், தான் அரசியலுக்கு வருவதன் காரணம்? தன்னுடைய அரசியல் எதிரி யார்? தன்னுடைய நிலைப்பாடு என்ன? என்று விளக்கமாக கூறினார். பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் எதிராக தான் அரசியலை முன்னெடுக்கப் போவதாக கூறியிருப்பதுடன் பல கருத்துக்களையும் கூறினார். மேடையில் விஜய் பேசியது உணர்ச்சிவசமாகவும் அதே நேரம் ரசிகர்களை கவரும் விதமாக நகைச்சுவையாகவும் இருந்தது. ஒரு சில நேரங்களில் திரைப்பட வசனங்களைப் போல் விஜய் மூச்சுவிடாமல் உணர்ச்சியின் உச்சத்தில் இருந்து பேசினார்.
மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்ற விஜய், அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுடன் நேரம் செலவிட்டு, ராணுவ வீரர்களின் அனுபவங்களை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.