மேலும் அறிய

கிராமத்து குளத்து நீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி: தஞ்சாவூர் அருகே நடந்த சோகம்

மருதகுடி கிராமத்தில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் ஊரணி குளம் உள்ளது, சுமார் 15 அடி ஆழத்திற்கும் மேல் உள்ள இந்த குளத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடி கிராமத்தில் உள்ள ஊரணி குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் போலீஸ் சரகம் மருதகுடி கிராமத்தில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் ஊரணி குளம் உள்ளது, சுமார் 15 அடி ஆழத்திற்கும் மேல் உள்ள இந்த குளத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோயில் திருவிழா நடந்து முடிந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று மாலை திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் மாதவன் (10). செந்தில் என்பவரின் மகன் பாலமுருகன் (10 ). ஸ்ரீதர் என்போரின் மகன் ஜஸ்வந்த் (8) ஆகிய மூன்று பேரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். இதில் மாதவன், பாலமுருகன் இருவரும் 5ம் வகுப்பும், ஜஸ்வந்த் இரண்டாம் வகுப்பும் படித்து வந்தனர். வீட்டில் இருந்தவர்களிடம் எதுவும் கூறாமல் வெளியில் வந்து விளையாடிய 3 பேரும் பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள கிராமமான மருதகுடிக்கு வந்துள்ளனர். தொடர்ந்து அங்குள்ள ஊரணி குளத்திற்கு வந்துள்ளனர்.

மாலை நேரம் என்பதால் குளம் உள்ள பகுதியில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குளத்தில் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். இந்த குளத்தில் ஆழம் அதிகம் இருப்பது தெரியாமல் அடுத்தடுத்து மூன்று பேரும் நீரில் மூழ்கி உள்ளனர். அப்பகுதியில் மக்கள் யாரும் இல்லாததால் இவர்கள் குளத்தில் குளித்ததையோ அல்லது மூழ்கியதையோ யாரும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதற்கிடையில் வெகு நேரம் ஆகியும் மாதவன் உட்பட மூணு பேரும் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். அப்பொழுதுதான் அவர்கள் மருதகுடி கிராமத்திற்கு சென்றதாக தகவல் கிடைத்து அங்கு சென்று பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது ஊரணி குளத்தின் கரையில் சிறுவர்கள் அணிந்திருந்த செருப்புகள் கிடந்ததை கண்டு பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் குளத்தில் இறங்கி குளித்து இருக்கலாம் என்று தெரிய வந்தது.

உடன் அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தபொழுது மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. உடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவர்களை ஏற்றி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார் மற்றும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குளத்தில் ஆழம் அதிகமாக இருந்துள்ளது. குளிப்பதற்காக இறங்கிய சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் மூழ்கி இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Embed widget