மேலும் அறிய

"ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்" அதிரடி தாக்குதல் ; என்ன பேசினார் இபிஎஸ்?

பொய் சொல்வதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் - எழுச்சிப் பயணத்தில் இபிஎஸ் அதிரடி தாக்குதல்

விழுப்புரம்: மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சிற்றம்பலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுத அவர் பேசுகையில் பொய் சொல்வது ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

திமுக பொய்யை பரப்பி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டனர்

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சிற்றம்பலத்தில் பேசுகையில், ‘’ 2021 தேர்தலில் மாதந்தோறும் 1,500 ரூபாய் கொடுப்போம் என நாங்கள் கூறியிருந்தோம். ஆனால் திமுக பொய்யை பரப்பி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டனர். 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாயை விட்டுட்டீங்க. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் 1,500 ரூபாய் வழங்குவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மன நிறைவு பெறும் வகையில் உரிமைத் தொகை வழங்குவோம்.

இப்போது வரிமேல் வரிபோட்டு மக்கள் தலையல் பெரிய பாரத்தை சுமத்தி விட்டனர் ரேசன் கடையில் 2 கிலோ சர்க்கரை கொடுப்போம் என்பது என்னாச்சு..? கேஸ் மானியம் , கல்விக் கடன் ரத்து , மாதாந்திர மின் கணக்கீடு என்னாச்சு..?  தண்ணீர் வரி கட்டினால்தான் நூறு நாள் வேலை திட்டம் என்கின்றனர்...கொடுப்பது 1000 ரூபாய் பிடுங்குவது 2 ஆயிரம் இதுதான் திராவிட மாடலின் சாதனை

மன்னர் ஆட்சிக்கு 2026 ல் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்

நீட் தேர்வு ரத்து செய்வோம் என கூறியதால் மாணவர்கள் உயிரிழக்க காரணமாகிவிட்டனர் . ஆட்சிக்கு வந்த பின் இரட்டை வேடம் போடுகின்றனர். திமுக குடும்பத்தில் இருப்போரே கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்பிற்கு வர முடியும். அடுத்து இன்பநிதி வரப்போகிறார்... நீங்கள் என்ன பட்டா போட்டு வைத்திருக்கிறீர்களா.? மன்னர் ஆட்சிக்கு 2026 ல் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்...

கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலை. அமைக்கிறார்கள். கல்வி என்றால் எனக்கு கசப்பதாக ஸ்டாலின்கூறுகிறார். கல்வி என்றால் எனக்கு உயிர் மூச்சு . பல கல்லூரிகளை திறந்த அரசு அதிமுக அரசு.  கல்வி கண் போல் முக்கியம். மருத்துவ கல்லூரி, கலை, பாலிடெக்னிக் என பல கல்லூரிகள் திறந்தோம். அப்பா பெயருக்காக நீ கல்லூரிகட்டுற, நாங்க மக்களுக்காக கட்டுறோம். விழுப்புரம் ஏழை எளிய மக்கள், நல்ல கல்வி கிடைக்க பல்கலைக்கழகம் கேட்டனர். உடனே அம்மா பெயர் பல்கலை உருவாக்கினோம். ஆட்சி மாறீயதும் அந்த பல்கலையை ரத்து செய்துவிட்டார். நீங்களா படிப்பை பற்றி பேசுறீங்க. 

162பிரிவு பயன்படுத்திய ஒரே முதல்வர் நான் தான்

அதிமுக தான் கல்விக்கு அடித்தளம். எந்த மாநிலம் வேண்டுமானாலும் பாருங்க, கல்வியில் புரட்சியில் ஏற்படுத்தியது அதிமுக. 2019-20லேயே இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக அமைந்தோம். 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். 2818 மாணவர்கள் மருத்துவர் ஆகியிருக்காங்க. அப்போது ஆளுநர் கையெழுத்துப்போடலை. 162பிரிவு பயன்படுத்திய ஒரே முதல்வர் நான் தான். 162 பிரிவு பயன்படுத்த தில் இல்லை. பொம்மை முதல்வர். அப்போது பாஜகவோடு உறவாத்தான் இருந்தோம், இருந்தாலும் ஆளுநர் மறுத்தார். எங்களைப் பார்த்தா சொல்ற…. பலபேருக்கு இது தெரியாது, தெரியவைத்தற்கு நன்றி. சட்டமசோதா நிறைவேறணும், மருத்துவராகணும் என்பதால் செய்தோம். எங்களைப் பற்றி பேச எந்த அருகதை இல்லை.

பாஜக வுக்கு நாங்க நடுங்கலை, நீங்கதான் அமலாக்கத்துறை கதவை தட்டும் என்று நடுங்குகிறார்கள்

பாஜக வுக்கு நாங்க நடுங்கலை, நீங்கதான். அமலாக்கத்துறை கதவை தட்டும் என்று நடுங்குகிறார்கள் அமைசச்ர்கள். மேலே சிபிஐ ரெய்டு கீழ கூட்டணிப் பேச்சு. ஆனால், அதிமுக எதற்கும் அஞ்சாது, தொண்டர்கள் நிறைந்த கட்சி. எனக்குப் பின் மகன், பேரன் என்று உள்ள கட்சி அல்ல, யார் வேண்டுமானலும் இந்த இடத்துக்கு வரமுடியும். எம்ஜிஆர், அம்மா ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர். எங்க கட்சியை உடைக்க என்னென்ன திட்டம் போட்ட? அனைத்தையும் உடைத்தெறிந்தோம். உங்க கட்சியை காப்பாத்துங்க. தேர்தல் நேரத்தில் உங்க அமைச்சர்கள், சகாகள் எங்க இருக்கணுமோ அங்கே பத்திரமா இருபாங்க, தக்க பாதுகாப்பு கொடுப்பாங்க, யார் கொடுப்பாங்கன்னு நீங்க பாத்துக்கோங்க.

உங்களுடன் ஸ்டாலின் என்று நோட்டீஸ் அடிச்சு கட்சி வேலையை அர்சு மூலம் செய்றாங்க. குடிநீர் இணைபு அடிப்படை வசதி, வரி, கட்டிட அனுமதி எல்லாம் இருக்கு. ஏற்கனவே விண்ணப்பிச்சு காத்துக்கிடக்க இப்ப வந்து கொடுக்கிறாரு. 4 ஆண்டுகள் என்ன செஞ்ச? மக்கள் செல்வாக்கு இழந்ததால் செய்கிறார். எச்சரிக்கையா இருங்க. 

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது, திண்ணையில் பெட்ஷீட் போட்டு, பெட்டியில் போடுங்க என்றார். ஆட்சிக்கு வந்ததும் மனு பார்த்து குறை தீர்க்கப்படும் என்றார். அப்பவே மக்கள் சுட்டிக்காட்டினாங்க, என்ன செய்தீர்கள்.?

 2026 அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெரும். தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். வானூர் தொகுதியில் அதிமுகவுகு இரட்டை இலையிலும், கூட்டணிக்கு அந்த சின்னத்துக்கு வாக்களியுங்கள். 

எம்பி தொகுதி மறுவரைவில் குறையும் என்று பொய்யை கட்டவிழ்த்துவிட்டார். ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது தமிழ்நாட்டுக்கு குறையாதுன்னு சொல்லிட்டாங்க. அறிவிக்கவே இல்லை, அப்புறம் எப்படி கருத்து சொல்ல முடியும்? இபிஎஸ் குறை சொல்லனும் பழி சுமத்தி மக்களை மடை மாற்றி பேசுகிறார். பொய். கொஞ்ச நஞ்சமல்ல நோபல் பரிசே கொடுக்கலாம். எதைப் பேசணும் என்று தெரியாமல் பேசுவது ஸ்டாலின் தான்.

பேய் ஆட்சிக்கு முடிவுகட்டுவோம், மக்கள் ஆட்சியை மலரச்செய்வோம். சுற்றுப்பயணத்தை டிவியில் காண்பிக்க கூடாது என்று மிரட்டுகிறார், கேபிளை கட் செய்கிறார். கூட்டத்தை பார்த்து பயம் வந்துவிட்டது. இதுவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்…’’ என்று முடித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Embed widget