மேலும் அறிய

எப்போது முடியும் முத்துராமலிங்கத் தேவர் பேருந்துநிலையப் பணி... காத்திருக்கும் உசிலம்பட்டி மக்கள் !

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கம் பேருந்துநிலையத்தை விரைவில் முடிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

உசிலம்பட்டி பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி அ.தி.மு.க., நகர் மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர் - கால தாமதம் ஆகும் பட்சத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.

நான்கு மாவட்டத்தை இணைக்கும் உசிலம்பட்டி
 
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்ட மக்களுக்கு மையப்பகுதியாக இருப்பது உசிலம்பட்டி. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிமாக இருக்கும். அதுவும் விசேஷ நாட்களில் சொல்லவே வேண்டும். உசிலம்பட்டி நகராட்சி முழுவதும் கூட்ட நெரிசல் அதிகளவு இருக்கும். இந்த சூழலில் உசிலம்பட்டி பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.
 
மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய கடந்த 2023 ஆம் ஆண்டு பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தை கையகப்படுத்தி, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் ஆமை வேகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறும் சூழலில்,  உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் உசிலம்பட்டி அதிமுக நிர்வாகிகள் நகராட்சி ஆணையாளர் இளவரசனிடம், பேருந்து நிலைய பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
 
நகராட்சி நிர்வாகம் முடக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி அ.தி.மு.க., நகர செயலாளரும், நகர் மன்ற உறுப்பினருமான பூமா ராஜா...,” உசிலம்பட்டி நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை என்றும், பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக திமுகவினரே வழக்கு தொடுத்துள்ளதாகவும், திமுகவிலிருந்த முன்னாள் உசிலம்பட்டி நகர் மன்ற தலைவி அதிமுகவிற்கு சென்றதால் இந்த பணிகளை அப்படியே நகராட்சி நிர்வாகம் முடக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
 
ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
 
மேலும் தற்போது ஊராட்சி ஒன்றியத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த சூழலில், நகராட்சி நிர்வாகத்தின், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் முறையிட்டு ஒரு ஏக்கரை கையகப்படுத்தி விரைவில் பேருந்து நிலைய பணிகளை முடிக்க வேண்டும் என்றும், கால தாமதம் ஆகும் பட்சத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவை பெற்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்ததோடு, ஆட்சி மாற்றம் வரும் போது இந்த பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிப்போம் என பேட்டியளித்தார்.

தலைப்பு செய்திகள்

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Embed widget