மேலும் அறிய

TN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு நடுவே பரபரப்பாக தமிழக சட்டப்பேரவை நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதியாக அமைச்சரவை மாற்றத்திற்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார் ஸ்டாலின். விரைவில் அவர் வெளிநாடு செல்லவுள்ளா நிலையில், அதற்கு முன்பு இதுகுறித்த அதிரடியாஅன அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வருவதால்.. கோட்டையே பரபரத்து கிடக்கிறது.

எப்படியும் இந்த முறை அமைச்சரவையில் பதவி வாங்கி விட வேண்டும் என ஒரு குரூப்பும், இருக்கும் அமைச்சர் பதவியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என ஒரு குரூப்பும் திமுக தலைமையிடம் முட்டி மோதி வருகிறது. 
சரி எலக்சனுக்கு முன்னாடி வேண்டாம், ரிசல்ட் வந்தவுடன் வேண்டாம்,  அசெம்ப்லி முடியட்டும் என நினைத்து அமைச்சரவை மாற்றத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் ஸ்டாலின். இதற்காக கட்சி சார்பிலும், உளவுத்துறை சார்பிலும் தனித்தனி ரிப்போர்ட்டுகள் தயாராக ஸ்டாலினின் மேஜையில் இருக்கின்றன. 

குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலின் போது சில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் சிலர் துறை ரீதியாக சரியாக செயல்படாமல், அரசு பங்களாவிலேயே அதிக நேரத்தை செலவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட, அமைச்சர்களின் பட்டியல் குறித்து தலைமைக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது.

இந்நிலையில் ஒரே நேரத்தில் பல்வேறு அதிரடிகளுக்கு தயாராகி வருகிறது திமுக தலைமை, அதன் ஒரு பகுதியாக கோவை, நெல்லை மாநாகராட்சி மேயர்களை ராஜினாமா செய்யவைத்து முதல் விக்கெட்டை தூக்கியுள்ளார் ஸ்டாலின். அடுத்ததாக அமைச்சர்களில் சிலரின் விக்கெட் விழுவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

சில அமைச்சர்களின் துறைகள் மாற்றம், சில அமைச்சர்கள் ஒரே அடியாக மாற்றம் என தகவல் பரவி வருகிறது. அதில் குறிப்பாக குறிப்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பெயர் நீண்ட நாட்களாகவே ரேடாரில் இருந்து வருகிறது, அவருக்கு எதிராக உள்ளூர் திமுகவிலேயே கோஸ்டி பூசல் நிலவி வந்த நிலையில், கட்சி ரீதியாக முதற்கட்ட நடவடிக்கை மேற்கொண்ட திமுக தலைமை, தற்போது அவரின் பதவியை பறிக்கவும் தயாராகிவருகிறது. குறிப்பாக அதன் பின்னணியில் மூத்த அமைச்சரும், திமுகவின் துணை பொதுச்செயலாளருமான  பொன்முடியின் செயல்பாடுகள் இருப்பதாக சொல்லப்டுகிறது. அதனால் இம்முறை அவர் அமைச்சரவையில் இருந்து கழட்டி விட படும் பட்சத்தில், இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் ஆவடி நாசர் ஸ்டாலின் கேபினேட்டில் கம் பேக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
 
மேலும் ஹிட் லிஸ்டில் அமைச்சர் மதிவேந்தன் பெயரும் அடிப்பட்டு வருகிறது. குறிப்பாக வனத்துறை அமைச்சராக அவருடைய செயல்பாடுகள் ஸ்டாலினுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், அண்மையில் உயர்நீதிமன்றத்தால் சீல் வைக்கபட்ட ஒரு தனியார் ரிசார்ட்டில் அமைச்சர் மதிவேந்தன் தங்கியதாக வெளியான தகவலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்படத்தக்கது. ஆனால், அருந்ததியர் சமூகத்தை திமுக சார்பில் பிரதிநிதித்துவப்படுத்த சட்டமன்றத்தில் மதிவேந்தன் ஒருவர் மட்டுமே இருப்பதால், அவரின் துறை மட்டுமே மாற்றபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது, நீட் விவகாரம், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விவகாரங்களில் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் விதமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், இங்கும் செட்டியார் சமூகத்தின் முகமாக சட்டமன்றத்தில் இவர் மட்டுமே இருப்பதால், அவருக்கும் அதிகபட்சம் துறை மட்டும் மாற்றபட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அதே வேளையில், போக்குவரத்து துறை அமைச்சராக தொடக்கத்தில் நியமிக்கபட்ட ராஜகண்ணப்பன் சில சர்ச்சைகளின் காரணமாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றபட்டார், ஆனால் தற்போது ஸ்டாலினின் குட் புக்கிற்கு மீண்டும் திரும்பியுள்ள அவருக்கு பொர்ட்போலியோவில் கூடுதல் பொறுப்பு வழங்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அதே போல், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த உணவுத்துறை அமைச்சரான சக்கிரபாணியின் மெத்தனமான செயல்பாட்டாலும், நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி கொள்வதில் அவருக்கு இருக்கும் சிரமத்தாலும் துறை ரீதியாக அங்கே பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யும், பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான விலையை உடனடியாக தர முடியாததும் சர்ச்சையானது. அதனால் இதை கூட பாக்க மாட்டிங்களா என்று தலைமை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரின் பதவி பறிக்கபட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் கூடுதலாக உள்ள மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை, வேறோரு எனெர்ஜிட்டிக் அமைச்சருக்கு மாற்றி கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே போன்று கொங்கு மண்டலத்தை சேர்ந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ள கோயில் சாமிநாதனும் மாற்றபடலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் நிச்சயம் இம்முறை துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினின் பதவி உயர்த்தபட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கவும் ஸ்டாலின் தயாராகி வருகிறார் என்பதால் அமைச்சகள் பலர் கலக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன

அரசியல் வீடியோக்கள்

Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்
Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Embed widget