Pro Kabaddi Eliminator 2: ப்ரோ கபடி எலிமினேட்டர் 2ல் மோதும் ஹரியானா - குஜராத் டைட்டன்ஸ்! யாருக்கு வெற்றி வாய்ப்பு?
ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் எலிமினேட்டர் 2 இல் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் எலிமினேட்டர் 2 இல் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 09:00 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இரு அணிகளும் கடந்த போட்டிகளில் எப்படி?
கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. அன்றைய போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 36-45 என்ற கணக்கில் தோல்வியடைந்து குறிப்பிடத்தக்கது. இது ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் குஜராத் அணியின் 9வது தோல்வியாகும்.
இதேபோல், கடந்த பிப்ரவரி 21 ம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் 39-53 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸிடம் தோற்றது.
குஜராத் ஜெயண்ட்ஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இதுவரை நேருக்கு நேர்:
ப்ரோ கபடி லீக் வரலாற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 9 முறை வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. அதேபோல், குஜராத் ஜெயண்ட்ஸ் 4 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி டையில் முடிந்தது.
ப்ரோ கபடி லீ சீசன் 10ல் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் 34-30 என்ற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றிபெற்றது.
இரு அணிகளும் புள்ளி பட்டியலில் எத்தனையாவது இடம்..?
13 வெற்றிகள் மற்றும் 9 தோல்விகளுடன், குஜராத் ஜெயண்ட்ஸ் ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 13 வெற்றி, 8 தோல்வி, ஒருமுறை டையுடன் 70 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இன்று படைக்கவிருக்கும் மைல்கற்கள்:
குஜராத் ஜெயண்ட்ஸின் சோனு தனது ப்ரோ கபடி லீக் வரலாற்றில் 200 ரெய்டு புள்ளிகளை எட்ட 7 ரெய்டு புள்ளிகள் மட்டும் தேவையாக உள்ளது. ஹரியானா ஸ்டீலர்ஸின் சிவம் பட்டேக்கு தனது பிகேஎல் வாழ்க்கையில் 100 ரெய்டு புள்ளிகளை எட்ட 4 ரெய்டு புள்ளிகள் தேவையாக உள்ளது.
அதேபோல், ப்ரோ கபடி லீக் வரலாற்றில் 200 டிஃபெண்ட்ஸ் புள்ளிகளை எட்ட குஜராத் ஜெயண்ட்ஸின் சோம்பிர் இன்னும் 7 டிஃபெண்ட்ஸ் புள்ளிகள் தேவையாக உள்ளது.
இரு அணிகளின் விவரம்:
குஜராத் ஜெயண்ட்ஸ்
ரைடர்ஸ்- சோனு, ஜக்தீப், ராகேஷ், பிரதீக் தஹியா, நிதின்.
டிஃபெண்டர்கள்- ரவிக்குமார், சோம்பீர், ஃபசல் அட்ராச்சலி, சவுரவ் குலியா, மனுஜ், தீபக் சிங், நித்தேஷ்.
ஆல்-ரவுண்டர்கள்- நரேந்தர் ஹூடா, ரோஹித் குலியா, விகாஷ் ஜக்லன், ரோஹன் சிங், பாலாஜி டி, அர்கம் ஷேக், முகமது நபிபக்ஷ், ஜிதேந்தர்.
ஹரியானா ஸ்டீலர்ஸ்
ரைடர்ஸ்- சந்திரன் ரஞ்சித், கே பிரபஞ்சன், சித்தார்த் தேசாய், வினய், ஷிவம் பட்டே, விஷால் டேட், ஜெயசூயா என்எஸ், கன்ஷ்யாம் மகர், ஹசன் பால்பூல்.
டிஃபெண்டர்கள்- ஹர்தீப், ஜெய்தீப் தஹியா, ராகுல் சேத்பால், ரவீந்திர சவுகான், மோஹித் நந்தன், மோனு ஹூடா, நவீன் குண்டு, ஹர்ஷ், சன்னி ஷெராவத், மோஹித், ஹிமான்ஷு சவுத்ரி.
ஆல்-ரவுண்டர்கள்- ஆஷிஷ்.
ப்ரோ கபடி சீசன் 10ஐ நேரலையில் எங்கே பார்ப்பது?
குஜராத் ஜெயண்ட்ஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் இடையேயான எலிமினேட்டர் 2 போட்டியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.