IPL 2025 PBKS vs SRH: ஃபார்முக்கு வந்த சன்ரைசர்ஸ்! பஞ்சாப்பை உருக்குலைத்த அபிஷேக்.. 247 ரன்களை எட்டிப்பிடித்து வெற்றி
IPL 2025 SRH vs PBKS: பஞ்சாப் அணி நிர்ணயித்த 247 ரன்களை சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் - பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி பிரப்சிம்ரன், ஸ்ரேயாஸ், ஸ்டோய்னிஸ் அதிரடியால் 246 ரன்களை எட்டியது.
ஹெட் - அபிஷேக் ருத்ரதாண்டவம்:
இந்த தொடரில் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்று அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் அணி இந்த இலக்கை எட்டுவது கடினம் என்று அனைவரும் கருதிய நிலையில், டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இலக்கு பெரியது என்பதால் இருவரும் அதிரடி காட்டினர்.
அர்ஷ்தீப்சிங், ஜான்சென், யஷ் தாக்கூர், மேக்ஸ்வெல், சாஹல் என யார் வீசினாலும் பந்து பறந்தது. இவர்களது அதிரடியால் ஓவருக்கு 15 ரன்கள் வேகத்தில் அடித்தனர். பவுண்டரி, சிக்ஸர் என இந்த ஜோடி விளாசித் தள்ளியது. குறிப்பாக, அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். இதனால், மிக விரைவாக 100 ரன்களை கடந்த ஐதரபாத் 11 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது.
அபிஷேக் சிக்ஸர் மழை:
இதனால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரு அணிக்கும் சரிசமமாக மாறியது. கடைசி 50 பந்துகளில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 85 ரன்கள் தேவைப்பட்டது. அபிஷேக் சர்மா பந்துவீச்சாளர்களை விளாசித் தள்ளினார். இந்த ஜோடியை பிரிக்க ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த முயற்சிக்கு கடைசியாக பலன் கிடைத்தது. டிராவிஸ் ஹெட் சாஹல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து 37 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 66 ரன்களுக்கு அவுட்டானார்.
இதையடுத்து, கிளாசென் களமிறங்கினார். மறுமுனையில் அபிஷேக் சர்மா சதம் விளாசினார். அவர் 40 பந்துகளில் 11 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதத்தை எட்டினார். கடைசி 36 பந்துகளில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 36 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடி காட்டியதால் ஐதரபாத் அணி 15வது ஓவரில் 200 ரன்களை எட்டியது.
141 ரன்கள்:
ஆனாலும், அபிஷேக் சர்மா விடாமல் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். கடைசி 24 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அபிஷேக் சர்மாவின் ரன் வேட்டை நிற்கவே இல்லை. இந்த நிலையில், பஞ்சாப்பிற்கு பயம் காட்டிய அபிஷேக் சர்மாவை அர்ஷ்தீப் சிங் அவுட்டாக்கினார். அவர் 55 பந்துகளில் 14 பவுண்டரி 10 சிக்ஸருடன் 141 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசி கட்ட பரபரப்பு:
இதனால், கடைசி 18 பந்துகளில் 23 ரன்கள் சன்ரைசர்ஸ் வெற்றிக்குத் தேவைப்பட்டது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இஷான் கிஷன் - கிளாசென் அதிரடி காட்டினர்.

இதனால், கடைசி 18 பந்துகளில் 23 ரன்கள் சன்ரைசர்ஸ் வெற்றிக்குத் தேவைப்பட்டது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இஷான் கிஷன் - கிளாசென் அதிரடி காட்டினர். கிளாசென் 14 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 ரன்கள் விளாச சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 247 ரன்களை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அர்ஷ்தீீப்சிங் 4 ஓவர்களில் 37 ரன்களையும், ஜான்சென் 2 ஓவரில் 39 ரன்களையும், யஷ் தாக்கூர் 2.3 ஓவரில் 40 ரன்களையும், மேக்ஸ்வெல் 4 ஓவரில் 40 ரன்களையும், சாஹல் 4 ஓவரில் 56 ரன்களையும் வாரி வழங்கினர்.