IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
IPL 2025 MI vs SRH: சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை முதலில் பந்துவீசுகிறது.

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரைப் பொறுத்தவரை சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இரு அணிகளுமே தொடக்கத்தில் தோல்வியைத் தழுவியது.
சன்ரைசர்ஸ்க்கு சவால்:
ஆனால், அதன்பின்பு தோல்வியில் இருந்து மீண்டு வந்த அணியாக மும்பை உருவெடுத்துள்ளது. ஆனால், சன்ரைசர்ஸ் அணி இன்னும் மோசமான நிலையிலே உள்ளது. தற்போதைய புள்ளிப்பட்டியல் நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 8 போட்டிகளில் ஆடி 4 புள்ளிகள், 4 தோல்வியுடன் 6வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 7 போட்டிகளில் ஆடி 2 வெற்றி 5 தோல்விகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணிக்கு ரன்ரேட் டெல்லி, குஜராத் அணிகளை காட்டிலும் நல்ல நிலையில் உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் மேலும் முன்னேற்றம் காணும். இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் சன்ரைசர்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.
பேட்டிங்கில் மிரட்டும் சன்ரைசர்ஸ்:
மும்பை அணியைப் பொறுத்தவரை ரோகித் சர்மா, ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வில் ஜேக்ஸ், பாண்ட்யா, நமன்தீர் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தலாக உள்ளனர். இவர்கள் இன்றைய போட்டியிலும் ஜொலித்தால் மும்பை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம் ஆகும்.
சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷன் கிஷன், நிதிஷ் ரெட்டி, அனிகெத் வர்மா, கிளாசென் ஆகியோர் அதிரடி காட்ட வேண்டியது அவசியம் ஆகும். இல்லாவிட்டால் சன்ரைசர்ஸ் சரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பவுலிங் எப்படி?
மும்பை அணியில் பும்ரா, போல்ட், தீபக் சாஹர், பாண்ட்யா வேகத்தில் அசத்த காத்துள்ளனர். சான்ட்னர், வில் ஜேக்ஸ் சுழலில் தூணாக உள்ளனர். சன்ரைசர்ஸ் அணியில் ஷமி, ஈசன் மலிங்கா, ஹர்ஷல் படேல், கம்மின்ஸ் ஆகியோர் சிறப்பாக வீசினால் மட்டுமே மும்பையை எதிர்க்க முடியும். இன்றைய போட்டி மும்பையை காட்டிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகுந்த சவால் மிகுந்த போட்டியாக மாறியுள்ளது.

