நத்தத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
நத்தம் அருகே புதுக்கோட்டை அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
நத்தம் அருகே புதுக்கோட்டை அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ரெட்டியபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன், ஶ்ரீ செல்வகணபதி, ஶ்ரீ பால சுப்பிரமணியர், ஶ்ரீ பாதகருப்பு, ஶ்ரீ பட்டாணி, ஶ்ரீ பெரியகருப்பு, ஶ்ரீ சின்னக்கருப்பு, ஶ்ரீ நொண்டிச்சாமி, ஶ்ரீ ஆண்டிச்சாமி, ஶ்ரீ பெரியம்மன், ஶ்ரீ பெருமாள் சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாடு மகாலட்சுமி ஹோமம், சுதர்சன் ஹோமம், நவகிரக ஹோமம், வழிபாடு, முதற்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளும் மகாபூர்ணாகுதி கடம்வலம் வந்த பிறகு கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்ற பிறகு தீபாராதனையை தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த காசி, ராமேஸ்வரம், அழகர்மலை, வைகை, காவேரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் யாகசாலையில் இருந்து கோவிலைச்சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
TN Fishermen Arrest: காலையிலேயே அதிர்ச்சி..! தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கும்பத்தின் மீது ஊற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.