மேலும் அறிய
Kumbh Mela: மகா கும்பமேளா - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புனித நீராடல்!
Kumbh Mela: பிரய்க்ராஜ்ஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி நீராடிய புகைப்படங்களின் தொகுப்பு இது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி - மகா கும்பமேளா
1/5

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலர் குவிகின்றனர். கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும்.
2/5

இந்தியா முழுவதிலும் இருந்தும் கும்பமேளாவிற்கு மக்கல் படையெடுத்து சென்று வருகிறார்கள். சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆகியோர் சென்று புனித நீராடினர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கும்பமேளாவில் பங்கேற்ற புகைப்படங்களை ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
3/5

ஒரே நாளில், 1.36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கும்பமேளாவில் பல்வேறு விபத்துகள் நடந்தது, மக்கள் உயிரிழந்ததும் நடந்தது.
4/5

"பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன். "
5/5

"இங்கு காற்றில் பரவியுள்ள தீவிரமான நேர்மறை சக்தி அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கெனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சியடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும்." என்று தெரிவித்துள்ளார்.
Published at : 22 Feb 2025 02:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















