திருமண நாளில் முக்கிய அறிவிப்பு.. விஜய் எடுத்த அதிரடி முடிவு.. அடுத்து என்ன நடக்குமோ?
நடிகர் விஜய் தனது திருமண நாளில் எடுத்திருக்கும் அதிரடி முடிவை வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கிய பிறகு முழு நேர அரசியலில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடைசி படம் என்பதையும் அவரே தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், அரசியல் வருகையை காெண்டாடி வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் திருமண நாளன்று கட்சி தலைவராக விஜய் எடுத்திருக்கும் முடிவு தான் வியப்பை அளித்துள்ளது.
அமைதி காக்கும் விஜய்
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக இருப்பவர்கள் விஜய் - சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். அவர் இயக்கும் முதல் படமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சமீபகாலமாக விஜய் - சங்கீதா குறித்து பலவிதமான வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், இவை யாவும் உண்மையில்லை என பத்திரிகையாளர்கள் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். நடிப்பு, அரசியல் என பிஸியாக இருந்து வரும் தனது ஸ்டைலில் வதந்திகளுக்கு விளக்கம் அளிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.
திருமண நாளில் அதிரடி முடிவு
கட்சி தொடங்கிய பிறகு போராட்டம், மாநாடு என சுழன்று கொண்டிருக்கிறார் விஜய். இந்நிலையில், விஜய் - சங்கீதா தம்பதியின் திருமண நாள் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆகும். ஆனால், இந்த நாளில் கட்சி தலைவராக அதிரடியான அறிவிப்பை தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 25ம் தேதி தவெக கட்சியின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. முதல் மாநாடு ஏற்கனவே விக்கரவாண்டியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளனர்.
விஜய் அறிவிப்பு
மதுரையில் நடக்க இருக்கும் மாநாடு தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். கடந்தாண்டு விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மதுரை என்பது விஜய்க்கு பிடித்த ஊராக இருக்கிறது. பழக்கத்திற்காக உயிரையே கொடுக்கும் ரசிகர்கள் இருக்கும் மதுரையில் எந்த அளவிற்கு கூட்டத்தை கட்டுப்படுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



















