மேலும் அறிய
Advertisement
PM Modi: சக்சஸ், கிராண்ட் சக்சஸ்..! ரஷ்யா, ஆஸ்திரியா பயணங்களை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி
PM Modi: ரஷ்யா, ஆஸ்திரியா பயணங்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
PM Modi: பிரதமர் மோடி தனது மூன்று நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு, வெற்றிகரமாக டெல்லி திரும்பினார். அவரை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். இந்த பயணத்தின் போது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாட்டு உயர்மட்ட தலைவர்களை சந்தித்து, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
#WATCH | Prime Minister Narendra Modi arrives at Palam airport in Delhi after concluding his two-nation visit to Russia and Austria pic.twitter.com/DQgnniodrN
— ANI (@ANI) July 11, 2024
பிரதமரின் ரஷ்யா பயணம்:
- கடந்த 8ம் தேதி தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு சென்றார்
- அதிபர் புதின் தனது அதிகாரப்பூர்வ மாளிகையில் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்தளித்தார்
- தொடர்ந்து 9ம் தேதி இந்திய சமூகத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி, உலக நன்மைக்காக தோஸ்த் ரஷ்யா உடன் இந்தியா தோளோடு தோள் கொடுத்து செயல்படுவதாக தெரிவித்தார்.
- தொடர்ந்து, பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இருநாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள், பொருளாதார கூட்டாண்மை மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
- பிரதமர் மோடியை தனது நண்பன் என பாராட்டியதோடு, ரஷ்யாவின் உயரிய விருதையும் வழங்கி அதிபர் புதின் கவுரவித்தார். அத்துடன் ரஷ்ய பயணம் முடிய, அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ஆஸ்திரியா சென்றடைந்தார்.
- முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு மோடி ரஷ்யாவிற்கு சென்றது இதுவே முதல்முறையாகும்.
ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி:
- ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து, இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
- தொடர்ந்து வியன்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். அப்போது, உலகத்திற்கு இந்தியா புத்தத்தை கொடுத்ததே தவிர, யுத்தத்தை கொடுக்கவில்லை என மோடி பேசினார்.
- தொடர்ந்து, இருநாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் மோடி இன்று காலை டெல்லி வந்தடைந்தார்
- கடந்த 41 ஆண்டுகளில் ஆஸ்திரியாவிற்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion