ரஜினி பற்றி பேசி வம்பில் மாட்டிய தவெக ராஜ்மோகன்...மன்னிப்பு கேட்டும் விடாத ரசிகர்கள்..அப்படி என்ன சொன்னார்?
நடிகர் ரஜினிகாந்த் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் மீது ரஜினி ரசிகர்கள் கடும் சைபர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்

ரஜினி பற்றி தவெக ராஜ்மோகன்
நடிகர் ரஜினிகாந்த் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை பேசி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் தவெக கொள்கை பரப்பு செயலாளர். அண்மையில் நடந்த தவெக கூட்டத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளர் அஜித் குமார் பற்றி பேசினார் ராஜ்மோகன். அப்போது இறந்தவரின் பெயர் அஜித் குமார் என்றாலும் தலைவர் விஜய் அவருக்காக குரல் கொடுப்பார் என குறிப்பிட்டு பேசினார். இந்த பேச்சு ரசிகர்களிடையே சர்ச்சையானது. இறந்தவருக்கு பெயர் அஜித் குமார் என்பதை நடிகர் அஜித்துடன் ராஜ்மோகன் தொடபுபடுத்தி பேசியது மலிவான பிரச்சார உத்தி என பலர் விமர்சித்தார்கள். இது குறித்து பேச்சி ஒன்றில் ராஜ்மோகன் பேசுகையில் மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லி ரஜினி ரசிகர்களிடையே சிக்கியுள்ளார்
டிரெண்டாகும் RIP Rajmohan
இதுகுறுத்து ராஜ்மோகன் கூறுகையில் " இறந்தவரின் பெயர் அஜித் குமார். அவரது பெயர் விபரங்களை குறிப்பிட்டு தான் நான் பேச முடியும். இறந்தவரின் பெயர் ரஜினிகாந்த் என்றால் அதை சொல்லிதான் நான் பேசமுடியும்" என பேசியுள்ளார். ரஜினியின் பெயரை ராஜ்மோகன் பயன்படுத்தியது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது . ராஜ்மோகனை விமர்சித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் ரஜினி ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் RIP Rajmohan என்கிற ஹேஷ்டேகையும் எக்ஸ் தளத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள்
Irandhu ponavar per nu common name solalam, better you can also say irandhu ponavar peru rajmohan too,
— Colourcrafts-Subash (@colourcrafts2) July 15, 2025
Adhulayum vanmatha kakitu endha name ah solra, one should have clarity in the words,
Nee dha makkal ah save panaporiya
One thing i can feel strong is vijay sir actually… pic.twitter.com/ZUgRRIc21N
ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜ்மோகன்
தனது பேசுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தவெக ராஜ்மோகன் ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். "இறந்துபோனவர் எவ்வளவு பெரிய லெஜண்டாக இருந்தாலும் அவர்களின் பெயரை சொல்ல வேண்டியது என் கடமை. லெஜண்ட் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது சூப்பர்ஸ்டார் தான். ரஜினி பெயரை நான் உதாரணமாக சொன்னது அதனால்தான் உடனே நான் ரஜினியைப் பற்றி தவறாக பேசிவிட்டேன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறார். மாமனிதர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீது நான் வைத்திருக்கும் மரியாதை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கே தெரியும் . அதில் மாற்றுகருத்தே கிடையாது. ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் தான் . நான் அப்படி சொன்னதில் ரஜினி ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்பட்டால் நான் மன்னிப்பு கேடுக் கொள்கிறேன். " என ராஜ்மோகன் கூறியுள்ளார்.





















