குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமியா இது.. உங்களுக்கு என்ன ஆச்சு?.. வீடியோவில் விளக்கம் தந்த நடிகை
குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த பவித்ரா லட்சுமி ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் பவித்ரா லட்சுமி. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். நாய் சேகர், ஜிகிரி தோஸ்த், யூகி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பதோடு மட்டும் அல்லாமல் சமூவலைதளங்களிலும் பிஸியாக வலம் வருகிறார். இந்நிலையில், பவித்ரா லட்சுமி உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாகவும், இதனால், உடல் ரீதியாக ஏற்பட்ட பிரச்னையால் அவர் சிகிச்சை பெற்று வருவதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம் கொடுத்தார். அதில், "நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன் என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது. அதேபோல் நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு எந்த சிகிச்சையும் பெறவில்லை. சமூக ஊடகங்களில் இது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். உங்களது பொழுது போக்கிற்காக என்னுடைய வாழ்க்கையோடு விளையாட வேண்டாம். எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது. இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
உடல் நல பிரச்னை
இந்நிலையில், பவித்ரா லட்சுமி உடல் மெலிந்து தோற்றமே மாறி காணப்படுவதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். சமூகவலைதளங்களில் வெளியான அவரது புகைப்படத்தை பார்த்ததும் பவித்ரா உங்களுக்கு என்ன ஆச்சு என கேட்க தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக தற்போது பதிவ்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நான் கடுமையான உடல் நல பிரச்னைகளை சந்தித்தேன். தற்போது நல்ல விதமாக தேறிவருகிறேன். இருப்பினும் சில பிரச்னைகள் இருக்கிறது. திடீரென எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
வீண் வதந்திகளை பரப்பாதீர்கள்
மேலும், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன். அதை செய்தேன், இதை செய்தேன் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள். நான் நல்ல விதமாக முறையான பராமரிப்பில் உள்ளேன். உங்களது பொழுதுபோக்கிற்காக எனது பெயருக்கும் நல்லெண்ணத்திற்கும் கேடு விளைவிக்கும் விதமாக பரப்ப வேண்டாம் என ஊடகங்களையும் மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். முன்பு இருப்பதை மீண்டும் கடினமான சூழலை உருவாக்காதீர்கள்.இதுபோன்று உங்களது குடும்பத்தினருக்கோ, உங்களுக்கோ செய்யாத ஒன்றை செய்யாதீீர்கள் என பவித்ரா லட்சுமி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram





















