ஜனவரி 6, 1959-ஆம் ஆண்டில் சண்டிகர், பஞ்சாபில் பிறந்த இவரின் இயற்பெயர் கபில்தேவ் நிகாஞ்ச் ஆகும்.
2/6
1983 உலகக் கோப்பை அணியில் இருந்த யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், கபில் தேவ் மட்டும்தான் ஆரம்பத்திலிருந்தே `நம்மால் உலகக் கோப்பை வெல்ல முடியும்’ என உறுதியாக நம்பினார் என்று.
3/6
அதீத நம்பிக்கைக்குக் காரணம் உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வீழ்த்தியதுதான். 1983 உலகக் கோப்பை லீக் சுற்றிலும் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வீழ்த்தியிருக்கிறது.
4/6
இந்த வெற்றிக்கு பிறகே இந்தியாவில் கிரிக்கெட்டின் அந்தஸ்து அதிகமாக உயர்ந்தது என்றே கூறலாம். இதையடுத்து 1987ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியுற்றது.
5/6
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, இதையடுத்து மீண்டும் கேப்டன் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தீர்க்கமான முடிவை கபில் எடுத்தார். இதையடுத்து கடந்த 1994ல் அவர் ஓய்வு பெறும்வரை கேப்டன் பொறுப்பை ஏற்கவில்லை.
6/6
தான் ஓய்வு பெற்ற போது டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையுடன் ஓய்வு பெற்றார். ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி தன்னை நிரபராதி என்று நிரூபித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு விதை போட்ட ஐ.சி.எல் (இந்தியன் கிரிக்கெட் லீக்)என்ற கிரிக்கெட்டை தொடங்கி வைத்தவர் கபில்தேவ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.