Anbumani Statement: ‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ம் ஆண்டு விழாவை ஒட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், ஆட்சி அதிகாரத்தில் உரிமையை வெல்வோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே பாமக-வில் தந்தை மகன் அதிகாரப் போர் நடைபெற்றுவரும் நிலையில், தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம் எனக் கூறியுள்ளார். அவரது அறிக்கையின் முழு விவரங்களை காணலாம்.
“ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்“
அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழாவில், வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம், ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்! என பாமக தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி, இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை, அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கபட வேண்டும் என்றால், பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும் என கூறியுள்ள அவர், தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால், அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும், அது நமது உரிமையும் கூட என தெரிவித்துள்ளார்.
அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட, நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம் என தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழா : வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்- ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 16, 2025
மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள்… pic.twitter.com/YZUT7xIjCd
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியுள்ள அன்புமணி, கட்சியில் மட்டும் முழு அதிகாரம் வேண்டும் என்ற அடிப்படையிலேயே தற்போது தந்தையுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார். அவர் தற்போது தனியாக கட்சி தொடங்கப் போகிறாரா அல்லது தந்தையுடன் சமாதானமாகப் போகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பாமக-வின் 37-ம் ஆண்டில் இப்படி ஒரு அறிக்கைவை வெளியிடுள்ளது குறிப்பிடத்தக்கது.





















