மேலும் அறிய
Singapore Fried Rice: சிங்கப்பூர் ஃப்ரைட் ரைஸ் ரெசிபி!
சுவையான சிங்கப்பூர் ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

சிங்கப்பூர் ஃப்ரைட் ரைஸ்
1/6

கறி மசாலா தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸ் செய்து அப்படியே எடுத்து வைத்து விட வேண்டும்.
2/6

அடுப்பை மிதமான தீயில் வைத்து, அகன்ற கடாவை வைத்து நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து 30 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
3/6

பின்னர் நறுக்கிய கேரட், பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் மற்றும் துருவிய முட்டைக்கோஸ் சேர்த்து, தீயை அதிகமாக வைத்து வறுக்க வேண்டும்.
4/6

இதனுடன் வெங்காயத்தாள் கீரையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்து கறி மசாலா தூள் சேர்த்து, நன்றாக கிளறி விட வேண்டும்.
5/6

அடுத்து சோயா சாஸ், சிவப்பு சில்லி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
6/6

பாஸ்மதி சாதத்தை சேர்த்து மெதுவாக கலந்துவிட வேண்டும். மசாலாவை சரிபார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்க்க வேண்டும். கடைசியில் நறுக்கிய வெங்காயத்தாள் கீரை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து விட்டால் போதும். அவ்வளவுதான் சுவையான சிங்கப்பூர் ஃப்ரைட் ரைஸ் தயார்.
Published at : 03 Dec 2023 02:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement