‘சேலையிலே ஸ்கேட்டிங்கா’- பெண்ணின் வைரல் வீடியோ !
46 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் புடவை அணிந்து ஸ்கேட்டிங் செய்த வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
![‘சேலையிலே ஸ்கேட்டிங்கா’- பெண்ணின் வைரல் வீடியோ ! 46 year old Toronto women Oorbee Roy's skating with saree goes viral in instagram ‘சேலையிலே ஸ்கேட்டிங்கா’- பெண்ணின் வைரல் வீடியோ !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/28/8c382672260fbc0a935d1ed942c26edf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொதுவாக ஒருவரின் கனவை துரத்த வயது ஒரு தடை இல்லை என்ற கூற்று உண்டு. அந்தக் கூற்றை சிலர் தம்முடைய வாழ்க்கை மூலம் உண்மை ஆக்குகின்றனர். அத்துடன் பலருக்கு அவர்கள் நம்பிக்கையை விதைக்கின்றனர். அந்தவகையில் 46 வயதில் பெண் ஒருவர் தன்னுடைய ஆசையை நிறைவேற்றி பலருக்கு நம்பிக்கையாக உள்ளார். யார் அவர்?
கனடாவின் டொராண்டோ பகுதியைச் சேர்ந்தவர் ஊர்பி ராய். 46 வயதான இவர் ஸ்கேட்டிங் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தன்னுடைய ஆசையை திருமணத்திற்கு பிறகு தான் தொடங்கியுள்ளார். இதை ‘ஆண்டி ஸ்கேட்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தொடங்கி பதிவிட்டி வருகிறார். அந்தப் பக்கத்தில், “46 வயதான சேலையில் ஸ்கேட்டிங் செய்யும் ஆண்டி நான். எப்போதும் அன்பு மற்றும் பாசிட்டிவிட்டியை பகிர்பவள். இடீஸ் நெவர் டூ லேட் ” என்ற வாசகத்தை வைத்துள்ளார். அவரின் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை 12 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்தப் பக்கத்தில் இவர் போடும் ஸ்கேட்டிங் வீடியோவை பலரும் பாராட்டி பதிவுகள் செய்து வந்தனர். இந்தச் சூழலில் கடந்த 11ஆம் தேதி புடவையுடன் ஸ்கேட்டிங் செய்யும் வீடியோ ஒன்றை இவர் பதிவாக இட்டிருந்தார். அந்தப் பதிவு தற்போது வைரலாக தொடங்கியுள்ளது. தற்போது வரை அதற்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் இந்த பதிவிற்கு நல்ல கமெண்ட்ஸை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தப் பதிவு மிகவும் உத்வேகத்தை தருகிறது என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் இந்தப் பதிவு நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது எனவும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலத்தில் நம்மை சுற்றி நெகட்டிவ் செய்திகள் வலம் வரும் சூழலில் இதுபோன்ற நம்பிக்கை அளிக்கும் பதிவு பலரை ஈர்த்துள்ளது. அத்துடன் இந்தப் பதிவுகளின் மூலம் பலருக்கு நம்பிக்கையும் உத்வேகமும் வளர வழி வகுக்கும். சாதிக்க வயது தடையில்லை என்ற வாக்கியத்திற்கு ஊர்பி ராய் ஒரு சான்றாக உள்ளார். நாள் ஒன்றுக்கு எத்தனை வீடியோ வந்தாலும், குறிப்பிட்ட சில வீடியோக்கள் மட்டுமே கவனம் பெறுகிறது. அந்த வகையில் இந்த வீடியோ தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: இது தான் முடி ட்ரெஸ்.. தலைமுடியை ஆடையாக மாற்றிய பெண் - வைரல் வீடியோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)