கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா.. சீர்வரிசை வழங்கிய துணை சபாநாயகர்
கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வளையல் புடவை குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி
திருவண்ணாமலை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் கலந்துகொண்டார். அதன் பின்னர் இன்று சட்டசபை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டியின் பிறந்தநாள் இன்று அதனை அறிந்த கர்ப்பிணி பெண்கள் சார்பில் கேக் வழங்கப்பட்டு துணை சபாநாயகர் கேக்கை வெட்டினார். பின்னர் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், புடவை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி
ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும் அதன்மூலம் தான் உங்களுடைய வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வலரும் பின்னர் உங்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற்றும் என்றும், அதேபோன்று கர்ப்பணி பெண்கள் அனைவரும் கீரைகள், பழங்கள் போன்ற சத்தான உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும், பெண்களுக்கான வளர்ச்சி திமுக ஆட்சியில்தான் முடியும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி திமுக அதற்கு உதாரணமாக தமிழக முழுவது அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை அறிவித்தார் தமிழக முதல்வர். மேலும் இன்னும் பெண்களுக்கான திட்டம் இன்னும் பல செய்ய உள்ளார் உங்களின் தமிழக முதல்வர் என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுவது வழக்கம், இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சாதி மத வேறுபாட்டை கடந்து வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதனை தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தலைமையேற்று வளைகாப்பு விழாவில் நடத்தி வைத்தார், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 3500 கர்ப்பணி பெண்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியின் முதலாவதாக சமுதாய வளைகாப்பில் 500க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், பூ, பழங்கள், வெற்றிலை பாக்கு, குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதனை கர்ப்பிணி பெண்கள் மனமகிழ்வுடன் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்து வகையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு காலங்களில் சாப்பிடக்கூடிய சத்தான உணவு கண்காட்சியை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி பார்வையிட்டோர்.