Jayachandran: ஸ்டுடியோவை விட்டு தப்பி ஓடிய பாடகர் ஜெயச்சந்திரன்; தொக்கா தூக்கி வந்து பாட வைத்த தயாரிப்பாளர்!
பாட முடியாது என்று கூறி ஸ்டூடியோவிலிருந்து தப்பித்து ஓடிய பாடகர் ஜெயச்சந்திரனை தேடி பிடித்து தொக்கா தூக்கி வந்து தயாரிப்பாளர் ஒருவர் பாட வைத்த சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது.

ஜெயச்சந்திர குட்டன்:
கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் பாலியத் ஜெயச்சந்திர குட்டன். 1944 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி பிறந்த ஜெயச்சந்திர குட்டன் சிறந்த பின்னணி பாடகராக உலகம் முழுவதும் அறியப்பட்டவர்.
ஜெயச்சந்திர குட்டனாக அறியப்பட்ட பாடகர், நாளடைவில் சினிமாவில் ஜெயச்சந்திரனாக ஜொலித்தார். மலையாள பாடகர் யேசுதாஸ் போன்று சங்கீதம் கற்று தேர்ந்தவர். 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற யூத் விழாவில், ஜெயச்சந்திரன் - கே ஜே யேசுதாஸை சந்தித்தார். அந்த ஆண்டில் பாரம்பரிய பாடகர் விருதை யேசுதாஸ் வென்ற போது அதே ஆண்டில், சிறந்த மிருதங்க கலைஞர் விருதை ஜெயச்சந்திரன் வென்றார்.
ஜெயச்சந்திரனின் அபார திறமையை நன்கு அறிந்து கொண்ட மலையாள பட தயாரிப்பாளர் பரமு அண்ணன் என்று சொல்லப்படும் ஷோபனா பரமேஷ்வரன் நாயர் 1965ஆம் ஆண்டு தனது படத்தில் ஒரு பாடலை பாட வேண்டும் என்று கேட்டு அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதையடுத்து ஜெயச்சந்திரனும் பாடுவதற்கு ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார். ஆனால், அங்குள்ள சூழல் ஜெயச்சந்திரனுக்கு ஒத்து வரவில்லை. இதன் காரணமாக அவரால் பாடுவதற்கு வரவில்லை.
ஷோபனா பரமேஷ்வரன் நாயர்:
இதைத் தொடர்ந்து அவர் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். ஆனால், பாடல் பாட வேண்டுமே, அதனால், ஜெயச்சந்திரனை தேடி தயாரிப்பாளர் ஷோபனா பரமேஷ்வரன் நாயர் அவரது வீட்டிற்கே சென்று தொக்கா தூக்கி வந்து, கட்டாயப்படுத்தி பாட வைத்திருக்கிறார். அப்படி அவர் பாடிய பாடல் சில காரணங்களால் வெளியாகாமல் போனது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 16,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அதோடு, ஒரு சில படங்களிலும் அவர நடித்திருக்கிறார். 1986 ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். 2 முறை தமிழ்நாடு மாநில விருது பெற்றுள்ளார்.
கடந்த 9ஆம் தேதி ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80. இவர், அரச குடுபத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரவிவர்மா கோச்சினியன் தம்புரான், தாயார் சுபர்தாரா குஞ்சம்மா. மறைந்த ஜெயச்சந்திரனுக்கு லட்சுமி என்ற மனைவியும், தீனானந்த் என்ற மகனும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

