ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் புறக்கணிப்பதாக அதிமுக இன்று அறிவித்துள்ளது. தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக இன்று அறிவித்துள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் எடுத்த முடிவால் அதிமுகவினர் ஷாக்:
கடந்த 2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ஈரோடு கிழக்கு தொகுதி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில், ஈ.வெ.ரா. திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழக்கவே, 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.
இதில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரும் சோகமாக உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆண்டு அவரும் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த சூழலில், மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே அந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
ஆனால், அதில் முக்கிய திருப்பமாக திமுகவே இந்த இடைத்தேர்தலில் நேரடியாக களம் காணும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக கொள்கை பரப்பு துணை செயலாளரான வி.சி. சந்திரகுமாரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போன்றே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது அது உறுதியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து கூட்டணி தலைவர்களுடன் பேசி அறிவிக்கப்படும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். ஆனால், அக்கட்சியில் உள்ள மற்றொரு பெரிய கட்சியான பாமக, உட்கட்சி பூசலில் சிக்கி உள்ளது. இளைஞர் அணி தலைவர் பதவிக்கு தனது பேரனை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டதால், மகன் அன்புமணி அதிருப்தியில் உள்ளார். மற்றொரு கூட்டணி கட்சியான தமிழ்மாநில காங்கிரஸ், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
இதையும் படிக்க: TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

