SIP முதலீடு - பேமெண்ட் நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!
SIP Payments: மியூட்சுவல் ஃப்ண்ட்ஸ் முதலீடு பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
“Systematic Investment Plan என்பதன் சுருக்கமே SIP. மியூட்சுவல் ஃப்ண்ட்ஸ், பங்குச்சந்தை முதலீடு ஆகியவை நிதி மேலாண்மை வழிகளில் ஒன்று. அந்த வகையில் SIP முதலீடு சிறந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2024-ல் தனியார் செய்தி தளத்தில் வெளியான தரவுகளின்படி, 62% பேர் மியூட்சுவல் ஃபண்ட் திட்டங்களை முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது. 57% பேர் ஃபிக்சட் டெபாசிட், recurring deposit ஆகியவற்றையிம் 41% ப்ராவிடண்ட் ஃபண்ட், அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதை தெரிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களில் சிறிது சிறிதாக முதலீடு செய்வதற்கான வழிமுறையே இந்த எஸ்.ஐ.பி. முதலீட்டு திட்டம். இது மாதந்தோறும் சிறு தொகையை மியூட்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். மாதத்திற்கு ரூ.500 யிலிருந்து முதலீடு செய்யலாம். சிலமுறை மாத தொகையை செலுத்த முடியவில்லை என்றால் என்ன செய்வது? அதற்குதான் SIP-யில் ஒரு வழி இருக்கிறது. பேமெண்ட் ’ pause’ செய்து வைக்கலாம். குறிப்பிட்ட மாதத்திற்கு மட்டும் பேமெண்ட் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் மூலம் எந்தவித சிக்கலும் வராது.
SIP திட்டத்தில் பேமண்ட் முறையை எப்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்பதை காணலாம்.
SIP திட்டம் - ’Pause ’ செய்வது பாதுகாப்பானதா?
சில மாதங்களில் அவசரகால நிதி தேவைகள் இருக்கலாம். மெடிக்கல் எமர்ஜென்சி அல்லது ஏதாவது ஒரு சிக்கல் இருக்கும் எனில், அப்போது SIP செலுத்தமுடியவில்லையே என்ற கவலை வேண்டாம். சிலசமயம் சந்தை நிலவரம் சரியில்லாத சூழலில் முதலீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் சில வசதிகள் இருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து செய்யப்படும் முதலீடுகளில் இருந்து பயன்பெறுவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது SIP.
SIP பேமண்ட் ‘Pause’ செய்வது எப்படி?
மியூட்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை தொடர்ந்து கொண்டு உங்களது விருப்பதை தெரிவிக்கவும். சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் Pause செய்யும் வசதியை கொண்டுள்ளது. செயலி மூலம் கூட தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் உண்டு.
'Pause' செய்ய வேண்டுகோள் விடுக்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சில நிறுவனங்களில் இந்த நடைமுறை உண்டு. இது ஆன்லைன் அல்லது நேரிடையாக கொடுத்து நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
எவ்வளவு காலத்திற்கு.. எத்தனை மாதங்கள் அல்லது காலகட்டத்திற்கு SIP பேமண்ட் நிறுத்திவைக்க வேண்டும் என்பதையும் குறிபிட வேண்டும். 3-6 மாதங்களுக்கு 'pause' செய்து வைக்கலாம். இது நிறுவனங்களை பொறுத்து மாறுபடும்.
'Pause’ செய்ய விண்ணப்பம் ஏற்கப்பட்டு அதற்கான உறுதி செய்யப்பட்ட தகவல் அனுப்பப்படும். அவ்வளவுதான்.
கவனிக்க வேண்டியவை?
மியூட்சுவல் ஃபண்ட் திட்டத்தில் SIP நீண்டகால முதலீட்டு திட்டம். சில நேரங்களில் பேமண்ட் ‘Pause' செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் அதை செய்யலாம். அப்போது கவனிக்க வேண்டியவைகள் பற்றி காணலாம்.
நீண்டகால முதலீடு என்பதால் திட்டத்திற்கு பணம் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால் அது உங்களுக்கு முதலீட்டு நோக்கங்களை பாதிக்கலாம். எனவே, Pause செய்வதற்கு முன்பு வேறு ஏதும் மாற்று வழி இருக்கிறதா என்பதை ஆராயவும்.
SIP Pause செய்துவிட்டு மீண்டும் அதை ரெசியூம் செய்யலாம். இதை ஆன்லைனில் செய்துவிடலாம். இந்தத் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்வது நல்ல பலன்களை தரும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.