மேலும் அறிய

TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்

TVK Vijay: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாட்டை கண்டித்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TVK Vijay: ”எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” என தவெக தலைவர் விஜய் சாடியுள்ளார்.

திமுகவை கடுமையாக சாடிய விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சொன்னது என்ன?

சட்டப்பேரவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்ற எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. திமுக ஆட்சி இருந்த வரை தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு நுழையவில்லை. அதிமுக ஆட்சி வந்தபிறகு தான் தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு நுழைந்தது. நீட் தேர்வை ஒன்றிய அரசுதான் ரத்து செய்ய முடியும். மாநில அரசால் ரத்து செய்ய முடியாது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தான் வாக்குறுதி அளித்து இருந்தோம்” என விளக்கமளித்து இருந்தார். முதலமைச்சரின் இந்த கருத்தை குறிப்பிட்டு தான், தவெக தலைவர் விஜய் தமிழக அரசை கண்டித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்
தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை - காரணம் என்ன?
Embed widget