மேலும் அறிய

Rasipalan January 6: மேஷத்துக்கு நன்மை.. தனுசுக்கு பாசம் - இன்றைய ராசிபலன்!

Rasi Palan Today, January 06,2025: இன்று மார்கழி மாதம் 22 ஆம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today January 06 2025: 

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷம்

எதிலும் பதற்றமின்றி செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் அன்பாக நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். விடாப்பிடியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

வெளியூர் பயணங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆசை பிறக்கும் நாள்.

மிதுனம்

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கல்வி சார்ந்த செயல்களில் மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.

கடகம்

வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணையுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். கடனை அடைப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும். புகழ் நிறைந்த நாள்.

சிம்மம்

உத்தியோக பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள்.

கன்னி

உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். வர்த்தகப் பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். கல்வி சார்ந்த பணிகளில் அறிமுகம் ஏற்படும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

துலாம்

நிலுவையில் இருந்துவந்த பழைய கடன்கள் வசூலாகும். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பழைய மகிழ்ச்சியான நினைவுகள் வெளிப்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான தருணங்கள் உருவாகும். சிந்தனை மேம்படும் நாள்.

விருச்சிகம்

உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

தனுசு

முக்கியமான முடிவுகளில் ஆலோசனை பெறவும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான உதவிகளில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாசம் மேம்படும் நாள்.

மகரம்

திட்டமிட்ட பணிகளில் இருந்துவந்த தடைகள் மறையும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புது விதமான மாற்றங்கள் ஏற்படும். கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். கணவன், மனைவி இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் புரிதலும் தெளிவும் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

கும்பம்

அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும்.  உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பதட்டமில்லாத செயல்பாடுகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.

மீனம்

எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் நேரிடும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களால் குழப்பங்கள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget