இந்தி தேசிய மொழி அல்ல என அஸ்வின் கூறியது சரிதான் - ஒப்புக்கொண்ட அண்ணாமலை!
சென்னையில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசினார்.

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது சரிதான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசினார்.
அப்போது, தமிழை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் யார்? என கேட்டார். மாணவர்கள் சத்தம்போட்டு பதில் அளித்தனர். இந்தி மொழி மாணவர்கள் யாராவது இருக்கிறீர்களா என கேட்டார். அங்கு எந்த சத்தமும் கேட்கவில்லை.
தொடர்ந்து பேசிய அஸ்வின், “இந்தி நம் தேசிய மொழி அல்ல. அது நமது அலுவல் மொழி. இங்கு இதை நான் சொல்ல நினைத்தேன். இன்ஜினியரிங் தான் நான் இந்திய அணியின் கேப்டன் ஆகாமல் போனதற்கு ஒரு காரணம். யாராவது என்னால் முடியாது என்றால் நான் எழுந்து விடுவேன். முடியும் என்று சொன்னால் தூங்கி விடுவேன்.
நான் இந்திய அணி கேப்டன் ஆகாததற்கு இன்ஞ்சினியரிங் படித்ததுதான் காரணம் - அஸ்வின் https://t.co/wupaoCz9iu | #teamindia #Ashwin #ravichandranashwin #Cricket pic.twitter.com/3G9aGBh9pK
— ABP Nadu (@abpnadu) January 10, 2025
நிறைய பேர் என்னால் இந்திய அணியின் கேப்டன் ஆக முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் தான் தூங்கி விட்டேன். இன்ஜினியரிங் சார்ந்த ஆசிரியர்கள் யாராவது என்னால் முடியாது என்று சொல்லியிருந்தால் நிச்சயம் எழுந்திருப்பேன்.
வாழ்நாள் முழுவதும் மாணவராக இருங்கள். அப்போதுதான் கற்றுக்கொள்வதை நிறுத்த மாட்டீர்கள். இல்லையென்றால் கற்றல் நின்றுவிடும்” என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “அஸ்வின் கூறியது சரிதான். நானும் அதையே சொல்கிறேன். இந்தி தேசிய மொழி அல்ல. அது ஒரு இணைப்பு மொழி. அது ஒரு வசதிக்கான மொழி. நான் எங்கும் இந்தி தேசிய மொழி என்று சொல்லவில்ல. வேறு யாரும் அவ்வாறு சொல்லவும் இல்லை” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

