Steven Smith : என்னையவா ஏலத்தில் எடுக்கல! ஐபிஎல் அணிகளுக்கு வார்னிங் கொடுத்த ஸ்மித்.. அதிரடி சதம்
Steven Smith : ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்ப்பட்டால் மாற்று வீரராக ஸ்மித்தை களமிறக்க அதிக வாய்ப்புள்ளது.

சிட்னி சிக்சர்ஸ் vs பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் இடையிலான போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தனது மூன்றாவது பிக் பாஷ் லீக் சதத்தை அடித்து அசத்தினார்.
ஸ்மித் சரவேடி:
ஆஸ்திரேலியாவில் நடந்து நடந்து வரும் பிக்பாஷ் லீக்கில் சிட்னி சிக்சர்ஸ் vs பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சிட்னி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கினார்.
இதையும் படிங்க: Champions Trophy 2025 : இந்திய அணி அறிவிப்பு தாமதம்! நேரம் கேட்கும் பிசிசிஐ.. அவகாசம் வழங்குமா ஐசிசி?
ஜோஷ் பிலிப்புடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்மித், தனது இன்னிங்ஸின் ஆரம்ப கட்டத்தில் நிதானமாக விளையாடினார். அவர் 36 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அவர் தனது அரைசதத்தில் 7 பவுண்டரிகள் அடித்தார். இருப்பினும், ஸ்மித் அரைசதத்தை கடந்த பிறகு தனது அதிரடியை காட்ட ஆரம்பித்தார்.58 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடித்து தனது மூன்றாவது பிபிஎல் சதத்தை ஸ்மித் பதிவு செய்தார்.
Steve Smith is something else 😲
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
Here's all the highlights from his 121* off 64 balls. #BBL14 pic.twitter.com/MTo82oWAv1
அதிக சதங்கள்:
பிபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த சாதனையை சமன் செய்து ஸ்மித் வரலாறு படைத்தார். அவர் இப்போது மூன்று சதங்களுடன் சக நாட்டவரான பென் மெக்டெர்மாட்டுடன் அதிக சதம் அடித்த முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இருப்பினும், ஸ்மித் 2011 இல் அறிமுகமானதிலிருந்து 32 பிக் பாஷ் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், அதே நேரத்தில் மெக்டெர்மாட் 100 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் அணிகளுக்கு வார்னிங் கொடுத்த ஸ்மித்:
பிபிஎல்லில் ஸ்மித் அடித்த சதம், டி20 கிரிக்கெட்டில் தன்னால் அதிரடியாக ஆட முடியும் என்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளுக்கு தனது செய்தியை பேட்டின் மூலம் காட்டியுள்ளார்.ஆனால் கடந்த மூன்று சீசன்களாக ஸ்மித்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. ஸ்மித் அடித்த இந்த சதத்தின் ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்ப்பட்டால் மாற்று வீரராக ஸ்மித்தை களமிறக்க அதிக வாய்ப்புள்ளது.